சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மீண்டும் 'பாரத் மாலா' திட்டத்தின் கீழ் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை மத்திய அரசு துவக்கியுள்ளது.
மத்திய அரசு பாரத் மாலா திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்பாடு மற்றும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் விழுப்புரம் - புதுச்சேரி - நாகை சாலை 4,929 கோடி ரூபாயில் அமைக்கப்பட இருந்தது. மாநில அரசு நிலம் கையகப்படுத்தி தராததால் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை நல்லுார் - மாதவரம் மேம்பாலச்சாலை திட்டங்களும் தாமதமாகின்றன. நீதிமன்ற வழக்கால் சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை பணிகளும் முடங்கி உள்ளன. இந்த சாலைப் பணிகளை மீண்டும் தொடரவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது.
பாரத் மாலா திட்டத்தின் கீழ் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை மத்திய அரசு துவங்க உள்ளது. பல்வேறு பணிகளுக்கு மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இன்றி சேதமடைந்துள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளும் புனரமைக்கப்பட உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE