கெஜ்ரிவாலுக்கு ஆதரவு, என்ஆர்சி.,க்கு எதிர்ப்பு : நெருக்கடியில் உத்தவ் தாக்கரே

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
மும்பை : மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சவால் விடும் விதமாக அவரது வீட்டு முன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.என்ஆர்சி.,யை கடுமையாக விமர்சித்து சிவசேனா தலைவரும், மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரேவிற்கு சவால் விட்டு மாதோஸ்ரீ பகுதியில் உள்ள அவரது வீடு முன் போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், மதிப்பிற்குரிய முதல்வரே,

இந்த செய்தியை கேட்க

மும்பை : மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சவால் விடும் விதமாக அவரது வீட்டு முன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news


என்ஆர்சி.,யை கடுமையாக விமர்சித்து சிவசேனா தலைவரும், மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரேவிற்கு சவால் விட்டு மாதோஸ்ரீ பகுதியில் உள்ள அவரது வீடு முன் போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், மதிப்பிற்குரிய முதல்வரே, சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் நீங்கள் எதிர்ப்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீங்கள் கூறுவது உண்மை என்றால், முதலில் உங்களின் சொந்த ஊரான பந்த்ரா பகுதியில் இருப்பவர்களை முதலில் வெளியேற்றுங்கள். அப்பகுதி முழுவதும் சட்டவிரோதமாக ஊடுருவியர்களே வசிக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news



இதே போன்று காங்., உடன் கூட்டணி வைத்து மஹா.,வில் ஆட்சி அமைத்துள்ள சிவசேனா, டில்லி தேர்தலில் காங்.,ஐ எதிர்த்து போட்டியிடும் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை ஆதரித்து கருத்து கூறி உள்ளது. சிவசேனாவில் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், டில்லி வளர்ச்சிக்காக பணியாற்றிவர் கெஜ்ரிவால். டில்லியை முன்மாதிரி மாநிலமாக மாற்றியவர் கெஜ்ரிவால் என கெஜ்ரிவாலை புகழ்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளது. இருப்பினும் கூட்டணி கட்சியான காங்.,க்கு ஆதரவாக ஒரு வரி கூட எழுதப்படவில்லை. கெஜ்ரிவாலுக்காக சிவசேனா பிரசாரம் செய்வது போன்ற இந்த கட்டுரையால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-பிப்-202016:59:00 IST Report Abuse
தமிழ் @ravi, chennai. பிஜேபி தான் நாலைந்து மாநிலங்களில் எப்படி ஆட்சியை பிடித்தார்கள் என்று பார்த்தோமே.
Rate this:
Cancel
Ravi - Chennai,இந்தியா
07-பிப்-202014:18:44 IST Report Abuse
Ravi பதவிக்காக அலைஞ்சான் கிடைத்து விட்டது , இப்போ அதுவே பிரச்னை ஆகிவிட்டது .
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
07-பிப்-202013:41:25 IST Report Abuse
Dr. Suriya இங்க பார்த்தீங்கன்னா இந்த பாக்கிகளை சப்போர்ட் பண்ணுறவங்க தான் கெஜ்ரிக்கு சப்போர்ட் பண்ணறாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X