அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேட்டை திறந்து பேட்டியளித்தால் தலைப்பு செய்தியா?: ஸ்டாலின் கடுப்பு

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (142)
Share
Advertisement
DMK, Stalin, Ranjikanth, PressMeet, MKStalin, திமுக, தலைவர், ஸ்டாலின், ரஜினிகாந்த், பேட்டி, கேட்

இந்த செய்தியை கேட்க

சென்னை: யாராவது கேட்டை திறந்து பேட்டியளித்தால் அதனை தலைப்பு செய்தியாக போடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசியதாவது: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக ஜெயகுமார் சரணடைந்துள்ளார். தவறாக நினைக்க வேண்டாம் அது புரோக்கர் ஜெயகுமார். ஆனால், அந்த துறை சார்ந்த அமைச்சரான ஜெயகுமார், முறைகேடு தொடர்பாக பதவி விலக வேண்டும். ஆன்மிகவாதிகள் என்னோடு இருப்பது எனக்கும் பெருமைதான். ஆனால் சிலர் எங்களை ஹிந்து மதத்தை எதிரானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர்.


latest tamil news



ஹிந்து எனக்கூறி திமுக.,வை வீட்டிற்கு அனுப்பிவிட நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. ஊடகங்கள் உண்மை செய்தியை மறைக்கின்றன. ஆனால் மக்கள் உண்மையை அறிந்து திமுக பக்கம் நிற்கிறார்கள். யாராவது கேட்டை திறந்து வாசலில் வந்து பேட்டி கொடுத்தால், அதை பிளாஸ் நியூஸ் போடுகின்றனர். பேட்டி கொடுத்துவிட்டு அவர் சூட்டிங் சென்று விடுகிறார். ஆனால், அவரின் பேட்டிக்கு தான் இப்போது முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதை தான் தலைப்பு செய்தியாக போடுகின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-202001:29:09 IST Report Abuse
Vittalanand ரஜினி முன்பக்க கேட்டை திறந்து பேசினார் நீ போலீஸ் வந்த போது பின்பக்கம் சுவர் ஏறி குதித்து ஓடியது மரந்து விட்டதா
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
08-பிப்-202000:00:22 IST Report Abuse
N.K தலீவருக்கு இனிமே சட்டமன்ற போக யோகம் இல்லை. கல்யாண வீடுமட்டும்தான். அப்டியே பேசிட்டு திரியவேண்டியதுதான் . //நாங்கள் இந்து விரோதிகள் இல்லை//கலைஞர் மகன் நான்/// ஆக சீனிசக்கர சித்தப்பா துண்டுசீட்டு எங்கப்பா///
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
07-பிப்-202023:56:12 IST Report Abuse
N.K ஒவ்வொரு கல்யாண வீடா போய் இப்படி விளம்பரம் தேடும் நிலை வந்துவிட்டதே ஐயோ பாவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X