பொது செய்தி

இந்தியா

பாலகோட் முகாமில் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி: உளவுத்துறை எச்சரிக்கை

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Balakot, TerrorCamp, Training, Attack, India, JeM, பாலகோட், பயங்கரவாதிகள், முகாம், பயிற்சி, ஜெய்ஷ்இமுகமது, உளவுத்துறை, எச்சரிக்கை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஓராண்டிற்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பயங்கரவாதிகள் முகாம் செயல்பட தொடங்கியதாகவும், இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக, 27 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்), கடந்தாண்டு பிப்., மாதம், இந்தியாவில் புல்வாமாவில் தாக்குதல் நடத்தியது. இதில், 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இதில், ஏராளமான பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.


latest tamil news




இந்நிலையில், ஓராண்டாக செயல்படாமல் இருந்த முகாம்கள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், முகாமில் 27 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும், இவர்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தலைவர் மசூத் அசாரின் உறவினரான யூசப் அசார் பயிற்சியளித்து வருவதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனால், முகாமில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-202012:20:52 IST Report Abuse
Mani . V "பாலகோட் முகாமில் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி" - அப்படின்னா யார் இந்த பயிற்சியை கொடுக்கிறாங்க? மறுபடியும் சந்தேகமாக இருக்கிறது. சரி, சரி ஏதாவது பிரச்சினையை திசை திருப்பணுமுன்னா இப்படி அரசியல் பண்ணிதான் ஆகணும்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-பிப்-202023:47:03 IST Report Abuse
Tamilan நாய் வாலை நிமிர்த்த முடியுமா ?
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
07-பிப்-202023:19:09 IST Report Abuse
N.K சீனாவில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த கொரோனா பாதித்தவர்களை மீட்டு பாலக்கோட்டில் விட்டுவிடவேண்டும். சரியான கரப்பாண்பூச்சிகளுக்கு பிறந்தவர்கள் போலிருக்கிறது கொல்ல கொல்ல வந்துகொண்டே இருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X