
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு காரணமாக தஞ்சை செல்லும் பாக்கியம் கிடைத்தது.பல முறை சென்ற இடம்தான் என்றாலும் இந்த முறை இப்போதுதான் புதிததாக போவது போன்ற உணர்வு

அதற்கு காரணம் குடமுழுக்கு தொடர்பாக பதினாறு பக்க சிறப்பு மலர் தயார் செய்வதில் எனது பங்கும் இருந்தது.தேவையான செய்திகள் படங்கள் திரட்டுவதற்காக பலரையும் சந்தித்த போது அவர்கள் உருகி உருகி தஞ்சை பெரியகோயில் பற்றி சொன்ன செய்திகள் எல்லாம் என்னை ஆச்சர்யத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

அதன்பிறகு கோயிலுக்குள்ளும் புறமும் பலமணி நேரம் செலவிட்டேன் அங்கு உள்ள ஒவ்வொரு கல்லையும் நேசித்தேன் எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது.ஒவ்வொரு முறை சுற்றிவந்து பார்த்த போதும் கோயிலும் வானமும் புதிய புதிய செய்திகளை சொன்னது.

குடமுழுக்கு முடிந்த ஊர் திரும்ப வேண்டிய நேரம் இரவு பத்து மணிக்கு மேல்தான் ரயில் அதுவரை என்ன செய்வது என்று யோசித்த போது, இருக்க இருக்கிறது பெருவுடையார் குடிகொண்டுள்ள பெரியகோயில் என்று மாலை மயங்கிய வேளையில் மீண்டும் கோயிலுக்குள் சென்றேன்.

கேமிராவை எடுக்க வேண்டாம் வெறும் கண்ணால் மட்டும் ரசித்துவிட்டு வருவோம் என்று எண்ணினேன் ஆனால் கோயிலின் பதுப்பொலிவும், வெள்ளமென பாய்ந்து நின்ற மின்ஒளியும் படம் எடுக்கச் சொல்லி துாண்டின

பிறகு என்ன நெஞ்சை அள்ளும் தஞ்சை பெரிய கோயிலின் அழகை பிரம்மாண்டத்தை இன்னும் கொஞ்சம் படமாக்கி தந்துள்ளேன் நன்றி!

--=எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE