அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்நாட்டு யுத்தத்தை துவங்கியிருக்கும் காங்., திமுக :எச்.ராஜா விளாசல்

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (65)
Share
Advertisement
HRaja,BJP,Congress,DMK,HRajaBJP,BJPHRaja,பாஜ,காங்கிரஸ்,திமுக,

இந்த செய்தியை கேட்க

சென்னை: பாகிஸ்தானை பிரித்து கொடுத்ததற்கு பிறகும், தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி போன்ற தீய சக்திகள், உள்நாட்டு யுத்தத்தை துவங்கியிருக்கிறார்கள் என பா.ஜ. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருக்கிறார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ளது. இதற்கு காங்., ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்., கம்யூ., திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், காங்., திமுக உள்ளிட்ட கட்சிகளை கண்டித்தும், எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


latest tamil news



அதில் அவர் கூறியுள்ளதாவது: முஸ்லீம்களுக்கு என்று நாடு பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை மதத்தின் ரீதியாக பிரித்து, பாரதத் தாயை ரத்த களறியாக்கியது காங்., கட்சி. தற்போது மீண்டும் பிரிவினையை தூண்டும் விதத்தில் நடக்கிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கன் நாடுகளிலிருக்கும் வஞ்சிக்கப்பட்ட மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கும்படி, கடந்த 2003ம் ஆண்டு அத்வானியிடம், பார்லி.,யில் மன்மோகன்சிங் கேட்டிருக்கிறார். அதைக்கொடுத்தால் இத்தாலி சோனியா இப்போது கத்துவார்களா?

மன்மோகன்சிங் இந்தியர் என்பதால் நியாயமாக பேசினார். இன்று சோனியா இத்தாலிகாரர் என்பதால் அவரது தலைமையிலான காங்., கட்சி தேச விரோத அமைப்பாக மாறிவிட்டது. யெச்சூரி தலைமையில் நடந்த சிபிஎம் மாநாட்டிலிலும் பாக்., உள்ளிட்ட நாடுகளிலுள்ள வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்க தீர்மானம் போட்டிருந்தார்கள்.

மோடி சர்காருக்கு எதிராக நீங்கள் அரசியல் நடத்துவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. அது எதிர்கட்சிகளின் உரிமை. ஆனால் அதற்காக தேசியத்தில் கை வைக்கக்கூடாது. ஜின்னா தனி பாக்., கேட்ட போது 'தனி நாடு அல்லது உள்நாட்டு யுத்தம்' என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால் இன்று பாகிஸ்தானை பிரித்து கொடுத்த பின்னரும், இங்கு உள்நாட்டு யுத்தத்தை திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி போன்ற தீய சக்திகள் இப்போது தொடங்கியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
08-பிப்-202019:55:26 IST Report Abuse
konanki மாலிக் ராஜா முஸ்லீம்களைப் பற்றி ஈ வே ரா கூறியதையும் எழுதுங்கள் என்று கேவலமான முறையில் எதிர்வினை வந்தால் என்ன செய்வீர்கள். H ராஜா பேசியது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை திட்டுங்கள். ஏன் இதில் தேவை இல்லாமல் பிராமணர்களை இழுக்கீறீங்க.உங்களுக்குஅந்த உரிமை எப்படி வந்தது யார் கொடுத்தசுதந்திரம்
Rate this:
Share this comment
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
08-பிப்-202013:36:03 IST Report Abuse
மனிதன் உள்நாட்டு யுத்தம் துவக்கியது யார்??? மக்களை பிரித்தாள்வது யார் ?என்றெல்லாம் மக்களுக்கு நன்றாக தெரியும்... .
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-பிப்-202011:56:14 IST Report Abuse
Malick Raja சிறந்த பிராமண குலத்தில் இப்படி சில தீய சக்திகள் இருப்பதால்தானோ அன்று பெரியார் கேட்டாராம் கூட்டத்தில் . " பாம்பையும் ,பாப்பானையும் கண்டால் ஏதடா முதலில் அடிப்பாய் என்ற போது கூட்டத்தில் சிலர் பாம்பை அடிப்போம் என்ற போது வெங்காயம் பாப்பானை முதலில் அடிக்கோணும் "என்று சொன்னாராம் . கொடிய சக்தி உலாவருவது இயலாத ஒன்றாகதானே இருக்கமுடியும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X