கொரோனா பாதிப்பு: பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.715 கோடி நிதி

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

ஹாங்காங் : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பில்கேட்ஸின், பில்கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை , இந்திய மதிப்பில் சுமார் ரூ.715 கோடி(100 மில்லியன் அமெரிக்க டாலர்) நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது.



latest tamil news



சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 636 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சீனாவில் சுமார் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. இதில் 4 ஆயிரம் பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வைரசினை தாக்கி அழிப்பதற்கான நடைமுறைகளையும் அதனை கட்டுப்படுத்தும் நடைமுறைகளையும் சீனா உட்பட பல நாடுகளும் முயற்சி செய்து வருகிறது.

தொடர்ந்து, பல நாடுகள் சீனாவுடனான தனது நாட்டின் எல்லைகளை மூடியதுடன், அனைத்து வர்த்தக தொடர்புகளையும் நிறுத்தியுள்ளன. அத்துடன் விமான சேவைகளையும் தவிர்த்து வருகிறது. தனது நாட்டு மக்களை மீட்பதற்கு முன்னிலை கொடுக்கும் வகையில் மட்டும் விமான சேவைகள் ஆங்காங்கே இயக்கப்படுகிறது. இதனால் சீனாவின் பொருளாதாரமும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதற்கு சீனா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் சீனா மற்றும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவுவதற்காக பில்கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,14,99,50,000) வழங்குவதாக அறிவித்துள்ளது.


latest tamil news



இது தொடர்பாக அந்த அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி மார்க் சுஸ்மான் கூறுகையில், அரசாங்கள் மட்டுமின்றி பல்வேறு துறை அமைப்புகளும் ( தொண்டு நிறுவனங்கள்) மட்டும் தன்னார்வலர்கள் போன்ற பலரும் நிதி உதவி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். அத்துடன் உலக சுகாதார அமைப்பும் தீவீர நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரஸைக் கண்டறிதல், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுதல், தடுப்பூசிகள் மருந்துகளை கண்டறிதல் உள்ளிட்டவைகளுக்கு இது உதவும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-பிப்-202010:18:25 IST Report Abuse
ஆப்பு பில்கேட்ஸ் தன்னுடைய சொத்தில் பெரும்பகுதியை சீனா மூலமாகவே சம்பாதித்தார். 1980 முதல், விற்கப்பட்ட ஒவ்வொரு கம்ப்யூட்டர் மூலம் சுமார் 100 டாலர் வருமானம். எத்தனை கோடி கம்ப்யூட்டர்கள் விற்கப்பட்டன? அதில் பெரும்பாலானவை சீன அடிமைகளை வைத்து வாங்கப்பட்டது. 100 பில்லியன் டாலருக்கு உரிமையாளர் 10 மில்லியன் குடுத்திருக்காரு. நாம எட்டணா போட்டுட்டு லட்சக்கணக்கில் பணம் வர வேண்டிப்போமே அது மாதிரி.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
08-பிப்-202006:19:33 IST Report Abuse
 Muruga Vel பில்கேட்ஸ் அவர்களுக்கு பரந்த மனம் ...அவர் வசிக்கும் சியாட்டில் நகரிலேயே நிறைய பிச்சைக்காரர்கள் கைக்குழந்தையுடன் ஷாப்பிங் மால் வாசல்களிலும் சாலை சந்திப்பில் சிக்னல் வருவதற்கு காத்திருப்போரிடம் கையேந்தி நிற்பதை அன்றாடம் காணலாம் … ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் போலியோ ஒழிக்க கோடிக்கணக்கான டாலர்களை வாரி வழங்குகிறார் .. அவருடைய சொத்து மதிப்பை பன்மடங்கு பெருக்கிய சத்திய நாதெல்லாவையும் வாழ்த்த வேண்டும் ..
Rate this:
Share this comment
Cancel
Charles - Burnaby,கனடா
08-பிப்-202002:15:22 IST Report Abuse
Charles இந்தியாவின் கோடீஸ்வர்களிடமிருந்து இன்னும் சில பைசாக்கள் கூட வரவில்லையே?? கள்ள நோட்டுக்களை செலவிடமுடியாதோ என்னவோ ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X