கொரோனா பாதிப்பு: பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.715 கோடி நிதி| Dinamalar

கொரோனா பாதிப்பு: பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.715 கோடி நிதி

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (10)
Share

ஹாங்காங் : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பில்கேட்ஸின், பில்கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை , இந்திய மதிப்பில் சுமார் ரூ.715 கோடி(100 மில்லியன் அமெரிக்க டாலர்) நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது.



latest tamil news



சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 636 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சீனாவில் சுமார் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. இதில் 4 ஆயிரம் பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வைரசினை தாக்கி அழிப்பதற்கான நடைமுறைகளையும் அதனை கட்டுப்படுத்தும் நடைமுறைகளையும் சீனா உட்பட பல நாடுகளும் முயற்சி செய்து வருகிறது.

தொடர்ந்து, பல நாடுகள் சீனாவுடனான தனது நாட்டின் எல்லைகளை மூடியதுடன், அனைத்து வர்த்தக தொடர்புகளையும் நிறுத்தியுள்ளன. அத்துடன் விமான சேவைகளையும் தவிர்த்து வருகிறது. தனது நாட்டு மக்களை மீட்பதற்கு முன்னிலை கொடுக்கும் வகையில் மட்டும் விமான சேவைகள் ஆங்காங்கே இயக்கப்படுகிறது. இதனால் சீனாவின் பொருளாதாரமும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதற்கு சீனா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் சீனா மற்றும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவுவதற்காக பில்கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,14,99,50,000) வழங்குவதாக அறிவித்துள்ளது.


latest tamil news



இது தொடர்பாக அந்த அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி மார்க் சுஸ்மான் கூறுகையில், அரசாங்கள் மட்டுமின்றி பல்வேறு துறை அமைப்புகளும் ( தொண்டு நிறுவனங்கள்) மட்டும் தன்னார்வலர்கள் போன்ற பலரும் நிதி உதவி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். அத்துடன் உலக சுகாதார அமைப்பும் தீவீர நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரஸைக் கண்டறிதல், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுதல், தடுப்பூசிகள் மருந்துகளை கண்டறிதல் உள்ளிட்டவைகளுக்கு இது உதவும். இவ்வாறு கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X