'ஜான்சன் அண்ட் ஜான்சன்' நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம்

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (8)
Advertisement

நியூ ஜெர்சி : 'ஜான்சன் & ஜான்சன்' பேபி பவுடரால் கேன்சன் வரும் அபாயம் உள்ளதாக அந்நிறுவனத்திற்கு ரூ. 5,359 கோடி அபராதம் விதித்து நியூ ஜெர்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பாக குழந்தைகள் உபயோகிக்கும் பவுடர், ஆயில் மற்றும் சோப் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பவுடாரால் குழந்தைகளுக்கு கேன்சர் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 4 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை, மத்திய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கிறது. மேலும் அது தொடர்பாக நஷ்ட ஈடு வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

வழக்கு விசாரணையில், ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதால் அது கேன்சரை உண்டாக்கும் அபாயம் உள்ளது. அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களிடமும் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை. இது தொடர்பாக மேலும் 16 ஆயிரத்திற்கும் அதிகமான சிவில் வழக்கு அந்நிறுவனம் மீது தொடரப்பட்டுதால், கிரிமினல் குற்ற விசாரணையும் நடக்கிறது. இதற்காக அந்நிறுவனத்திற்கு நியூ ஜெர்சி நீதிமன்றம் சுமார் 5,359 கோடி ரூபாயை (750 மில்லியன் அமெரிக்க டாலர்) அபராதமாக விதித்துள்ளது.

இது தொடர்பாக, இந்த குற்றச்சாட்டுகளை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மறுத்துள்ளது. தவறான விபரங்களின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-பிப்-202008:32:27 IST Report Abuse
ஆரூர் ரங் இன்றும் இந்தியாவில் பேபி பவுடர் மார்க்கெட்டில் ஜான்சன்தான் முன்னிலை வகிக்கிறது . பல கோடி குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது . பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் முகப்பவுடர் நல்லதல்ல எனச்சொன்னால் பலர் ஏற்க மறுக்கிறார்கள் .எந்த மருத்துவரும் அது அத்தியாவசியம் என எழுதித்தருவதில்லை . அமெரிக்காவோடு வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என நினைத்து அரசு மவுனம் காப்பது சரியல்ல. முன்பே இடுப்பெலும்பு மாற்று ( articular surface replacement (ASR) hip implant, ) உபகரணங்களில் ஜான்சன் கம்பெனியின் தவறால் பலருக்கு பாதிப்பேற்பட்டபோதும் கோர்ட்டுக்கள் தலையிட நேர்ந்தது நினைவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
ventoutloud -  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-202023:18:53 IST Report Abuse
ventoutloud hope this fine will cure the cancer and bring back those life back to earth....
Rate this:
Share this comment
Cancel
07-பிப்-202023:15:44 IST Report Abuse
N.K (நான் தண்டக்கோண் இல்லை) ரூ. 5,359 கோடி அபராதம் கட்டிவிட்டால் கேன்சர் சரியாகிவிடுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X