பிரதமர் போல் மோடி நடந்துகொள்வதில்லை: ராகுல் தாக்கு

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (74)
Advertisement
Congress,Rahul,RahulGandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல்காந்தி,PM,Modi,Parliament,பிரதமர்,மோடி

புதுடில்லி: மோடி, பிரதமர் பதவிக்கு உரிய சிறப்பு தகுதிகள் எதுவும் இல்லாமல் நடந்து கொள்கிறார் என காங்., எம்.பி., ராகுல் கூறினார்.

டில்லி தேர்தல் பிரசாரத்தின் போது, வேலை கிடைக்காத இளைஞர்கள் பிரதமர் மோடியை கம்பால் அடிப்பார்கள் என ராகுல் பேசியிருந்தார். நேற்று லோக்சபாவில் நடந்த விவாதத்தின் போது, ராகுலை டியூப்லைட் என்று பதிலடி தந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில் இன்றும் லோக்சபாவில் நடந்த பதிலடி பேச்சுக்களால், காங் மற்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதனால் ஏற்பட்ட அமளியால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.





பின் பார்லி.,க்கு வெளியே செய்தியாளர்களை சந்தி்த்த ராகுல் பேசியதாவது: பிரதமர் பதவிக்கென சில சிறப்பு அந்தஸ்துகள் உள்ளன. பிரதமர் பதவி வகிப்பவர்களுக்கு தனி குணாதிசியம், பண்புகள் இருக்கும். ஆனால் நமது பிரதமருக்கு அப்படி எதுவும் இல்லை. அவர் பிரதமர் போலவே நடந்து கொள்வதில்லை. பார்லி.,யில் எங்களை பேச அனுமதிக்கவில்லை. காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கப்பட்டது லோக்சபா டிவியை பார்த்தால் தெரியும். நாங்கள் யாரையும் தாக்கவில்லை.





பார்லி.,யில் வேலைவாய்ப்பின்மை குறித்து பேசுவதை தடுக்க இன்று திட்டமிட்டு அமளி உருவாக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க பிரதமரிடம் எந்த திட்டமிடலும் இல்லை என்பதை இளைஞர்கள் கண்கூடாக காணலாம். பிரதமரை பாதுகாக்க பார்லி.,யின் நேரத்தை பா.ஜ., வீணடித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-202012:29:11 IST Report Abuse
Mani . V சில நேரங்களில் ராகுல் உண்மையை பேசி விடுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-பிப்-202016:08:37 IST Report Abuse
தமிழ்வேல் இன்னைக்கு, எல்லா சொம்புகளும் இங்கே வந்திருக்குதுங்க...ஆனால், ஒன்னுகூட இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு பத்தி டியூப்லயிட் பேசுனத்துக்கு, தலையும் சரி, இங்கே வாலுகளும் சரி எந்த பதிலும் சொல்லவே இல்ல.
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
08-பிப்-202019:32:32 IST Report Abuse
வல்வில் ஓரி காங்கிரஸ் ஆட்சியில இருந்தபோது நாங்க கேட்ட கேள்விக்கெல்லாம் நீர் பதில் சொன்னீரா? இல்லேல்ல..? ஜாலியா வேடிக்கை மட்டும் பாரும் சார்...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-பிப்-202023:16:07 IST Report Abuse
தமிழ்வேல் கேள்வி எங்கே கேட்டீங்க ? ஒவ்வொன்னுக்கும் போராட்டம் செய்வதும், பார்லியை முடுக்குவதும்தானே பொழுதிக்கும் செய்தீங்க ? ஆனால், நீங்க ஆட்சிக்கு வந்ததும் இதுக்கெல்லாம் போராட்டம் செய்தீங்களோ அதை எல்லாம் சட்டம் ஆக்கினீங்க. உண்மைதானே ? கேட்டால், இதுவும் உங்களோட திட்டம்தான்...இப்போ எதுக்கு கத்துறீங்கன்னு சொல்றானுவ.. இப்போ இவன்களும் உங்க கிட்டே கத்துக்கிட்டு போராட்டம் செய்றான்க. பேய்க்கு பயந்து பிடாரிகிட்டே நாட்டைக் குடுத்துட்டு இப்போ பேயே தேவலாம்னு தோணுது....
Rate this:
Share this comment
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
08-பிப்-202013:17:59 IST Report Abuse
S.kausalya இவர் முதலில் இந்தியன் ஆக நடந்து கொள்ளட்டும்.கண்ணடிப்பது, அசட்டு சிரிப்பு சிரிப்பது, ஏதாவது வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு, நீதி மன்றத்தில் மன்னிப்பு கேட்பது இவையெல்லாம் ஒரு எதிர் கட்சி ஆள் செய்வதா? இதில் பிரதம மந்திரி ஆக ஆசை வேறு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X