பிரதமர் போல் மோடி நடந்துகொள்வதில்லை: ராகுல் தாக்கு| Dinamalar

பிரதமர் போல் மோடி நடந்துகொள்வதில்லை: ராகுல் தாக்கு

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (74)
Share
Congress,Rahul,RahulGandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல்காந்தி,PM,Modi,Parliament,பிரதமர்,மோடி

புதுடில்லி: மோடி, பிரதமர் பதவிக்கு உரிய சிறப்பு தகுதிகள் எதுவும் இல்லாமல் நடந்து கொள்கிறார் என காங்., எம்.பி., ராகுல் கூறினார்.

டில்லி தேர்தல் பிரசாரத்தின் போது, வேலை கிடைக்காத இளைஞர்கள் பிரதமர் மோடியை கம்பால் அடிப்பார்கள் என ராகுல் பேசியிருந்தார். நேற்று லோக்சபாவில் நடந்த விவாதத்தின் போது, ராகுலை டியூப்லைட் என்று பதிலடி தந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில் இன்றும் லோக்சபாவில் நடந்த பதிலடி பேச்சுக்களால், காங் மற்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதனால் ஏற்பட்ட அமளியால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil news



பின் பார்லி.,க்கு வெளியே செய்தியாளர்களை சந்தி்த்த ராகுல் பேசியதாவது: பிரதமர் பதவிக்கென சில சிறப்பு அந்தஸ்துகள் உள்ளன. பிரதமர் பதவி வகிப்பவர்களுக்கு தனி குணாதிசியம், பண்புகள் இருக்கும். ஆனால் நமது பிரதமருக்கு அப்படி எதுவும் இல்லை. அவர் பிரதமர் போலவே நடந்து கொள்வதில்லை. பார்லி.,யில் எங்களை பேச அனுமதிக்கவில்லை. காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கப்பட்டது லோக்சபா டிவியை பார்த்தால் தெரியும். நாங்கள் யாரையும் தாக்கவில்லை.


latest tamil news



பார்லி.,யில் வேலைவாய்ப்பின்மை குறித்து பேசுவதை தடுக்க இன்று திட்டமிட்டு அமளி உருவாக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க பிரதமரிடம் எந்த திட்டமிடலும் இல்லை என்பதை இளைஞர்கள் கண்கூடாக காணலாம். பிரதமரை பாதுகாக்க பார்லி.,யின் நேரத்தை பா.ஜ., வீணடித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X