பொது செய்தி

இந்தியா

கேரள பட்ஜெட் புத்தக அட்டையில் காந்தி கொலை ஓவியம்!

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (45)
Advertisement
Budget,kerala,gandhi,கேரளா,பட்ஜெட்,காந்தி

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில், இன்று (பிப்.,7) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் புத்தகத்தின் அட்டையில், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வின் ஓவியம் இடம் பெற்றிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,





கேரள சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக், இன்று, 2020 -21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் புத்தகத்தை வாங்கி பார்த்த எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், பட்ஜெட்டின் அட்டையில், மஹாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும், ஓவியம் இடம் பெற்றிருந்தது. காந்தியின் உடல், குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை போலவும், அவரது உடலை மக்கள் சூழ்ந்துகொண்டு, அழுவதைப் போலவும் படம் வரையப்பட்டிருந்தது.

இது பற்றி நிதியமைச்சர் தாமஸ் கூறுகையில், '' இது ஒரு மலையாள கலைஞரின் ஓவியம். மத்தியில், ஆளும் அரசால் போற்ற்றப்படும், ஹிந்து வகுப்புவாதிகளால், மஹாத்மா காந்தி கொலை செய்யப்பட்டார் என்பதை, யாரும் மறக்க முடியாது; எங்களுக்கு எப்போதும் நினைவிருக்கும்,'' என்றார்.





படஜெட் புத்தகத்தில், இந்த ஓவியம் இடம் பெற்றதற்கு, காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ''ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வை, நாங்களும் எதிர்கிறோம். ஆனால், பட்ஜெட் உரை இடம் பெறும் புத்தகத்தில், இப்படி ஒரு ஓவியம் இடம் பெற்றிருக்க தேவையில்லை. எதிர்ப்பை காட்ட, வேறு வழிகள் உள்ளன,'' என்றார்.

'கேரளாவில், கடந்த, நான்கு ஆண்டுகளாக , எந்த வளர்ச்சியும் இல்லை. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை மறைக்க, இப்படிப்பட்ட படங்களை, இடதுசாரிகள் வெளியிடுகின்றனர். அடுத்த ஆண்டு, மே மாதத்துக்குப் பின், இந்தியாவில், இடது சாரிகள் ஆட்சி என்ற பெயரே இருக்காது' என, கேரள மாநில பா.ஜ., தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian A - Bangalore,இந்தியா
08-பிப்-202019:06:11 IST Report Abuse
Balasubramanian A அந்த மாபெரும் தலைவரின் மறைவை அரசியல் ஆதாயம் அடைய பயன்படுத்துவது கண்டிக்கத்தக்க செயல். இம்மாதிரி செயல்களால் இருக்கும் ஓர் மாநில ஆட்சியையும் இடதுசாரி கூட்டணி இழந்துவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-பிப்-202015:57:22 IST Report Abuse
Endrum Indian கேரளா தானே அது முஸ்லீம் கிறித்துவ நாடு அப்படித்தானிருக்கும் இந்த படத்தை போட்டு ???இதன் உண்மை இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் உங்களையும் அதே போல கொலை செய்வோம் மக்களே என்று சொல்வது போல இருக்கின்றது.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
08-பிப்-202012:07:08 IST Report Abuse
Anand நவகாளி படுகொலை சித்திரத்தை இப்படி இட இடுவார்களா இந்த உண்டியல் குலுக்கிகள்? , இப்படிப்பட்ட சித்திரத்தை பட்ஜெட் புத்தக அட்டையில் இட காரணமாக இருந்தவனையும் அதற்கு முட்டுக்கொடுக்கும் டி.எம். தாமஸ் ஐசக் என்பவனையும் அடிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X