சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு பேட்டி அறிக்கை

Added : பிப் 07, 2020
Advertisement
 பேச்சு பேட்டி அறிக்கை

'மக்களைக் கடனாளியாக்க திட்டம் போட்டு, வங்கிகள் மூலம் செயல்படுத்தியது யார்ன்னு அவங்களுக்குத் தெரியாதுன்னு, நீங்க நினைச்சிட்டீங்களோ...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு:

புழக்கத்தில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது, பா.ஜ., தலைமையிலான, மத்திய அரசு செய்த இமாலய தவறு. சரியாக திட்டமிடப்படாமல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை, மத்திய அரசு அமல்படுத்தியது, வர்த்தக முறையில், மிகப்பெரிய குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளது. அது மட்டுமின்றி, சிறிய வங்கிகளை, பெரிய வங்கிகளுடன் இணைத்தது, மத்திய அரசு செய்த மற்றொரு தவறு. இதனால், கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்தி விட்டன.

'ஜெயகுமார் தலைமறைவாவே இருந்திருந்தா, அதை வச்சு பெரிய அரசியல் செஞ்சு, போராட்டம் நடத்திடலாம்ன்னு போட்ட திட்டத்துக்கு, அவரோட சரண்டர், ஊறு விளைவிச்சா மாதிரி ஆகிடிச்சே...' என்ற நினைப்புடன், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் அறிக்கை:

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடில் தேடப்பட்டு வந்த முக்கிய இடைத்தரகர் ஜெயகுமார், சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்திருப்பது, ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அளிக்கிறது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் அவரை தேடி வருகின்றனர் என்ற செய்திகள் வெளிவந்த நேரத்தில், சென்னையிலேயே அவர் சரண் அடைந்து இருக்கிறார். இந்த முறைகேடால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி, ஒரு பராம்பரியமிக்க தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை சிதைக்கப்பட்டுள்ளது.

'மின் வெட்டு இல்லியா... ரெண்டு, மூணு நாளா, எல்லா பத்திரிகையிலும், 'மின் தடை' செய்தி பெரிய அளவில் வெளியாகுறதை நீங்க பார்க்கலியா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி பேச்சு:

தமிழகம், மின் வெட்டு இல்லாத மின் மிகை மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில், 480 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில், 130 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மின்கோபுரங்கள் அமைக்க நிலம் அளித்த, விவசாயிகளுக்கு விரைவில், இழப்பீடு வழங்குவதற்கான பணிகள் முடிக்கப்படும்.

'ரஜினி படம் எப்படின்னு, உங்க பேரன், பேத்தியைக் கேட்டுப் பாருங்களேன்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன் பேட்டி:

ரஜினிகாந்த் நல்ல நடிகர். ரசிகர்களிடம், தற்போது அவரது நடிப்பு எடுபடவில்லை. எனவே, தன் புதிய படங்கள் வெளியாகும் போதெல்லாம், அரசியல் கருத்துக்களை கூறி, படத்தை வெற்றி பெற முயற்சிக்கிறார். அவர் அரசியல் கட்சியை துவக்க போவதில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X