சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஜய் படப்பிடிப்பிற்கு பா.ஜ., எதிர்ப்பு; ரசிகர்கள் மீது தடியடி

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (49)
Advertisement
Vijay,Neyveli,NLC,shooting_spot,BJP,BharatiyaJanataParty,பாஜ

நெய்வேலி: என்.எல்.சி., சுரங்கத்தில், படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். நடிகர் விஜயை காண முண்டியடித்த ரசிகர்களை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், தடியடி நடத்தி கலைத்தனர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி, என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில், விஜய் நடிக்கும், மாஸ்டர் படப்பிடிப்பு, நான்கு நாட்களாக நடந்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட இடமான இச்சுரங்கத்தில், படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, இன்று மாலை, பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.எல்.சி., அதிகாரிகளிடம், 'பாதுகாக்கப்பட்ட இடமான, சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது எப்படி? படப்பிடிப்பு நடத்த, தொடர்ந்து அனுமதித்தால், போராட்டத்தில் ஈடுபடுவோம்' எனக் கூறி, கலைந்து சென்றனர்.

அதை தொடர்ந்து, பா.ஜ., போராட்டத்தை கண்டித்தும், நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், இரண்டாம் சுரங்க நுழைவு வாயிலில், வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாலை, 6:30 மணியளவில், படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த விஜயை பார்க்க, சுரங்க நுழைவு வாயில் முன் உள்ள, 'மெயின் கேட்' மீது ரசிகர்கள் ஏறி, முண்டியடித்தனர். பாதுகாப்பு பணியிலிருந்த, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், ரசிகர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-பிப்-202015:16:55 IST Report Abuse
விபூதி ரசிகர்கள்ன்னா யாரு?
Rate this:
Share this comment
JMK - Madurai,இந்தியா
08-பிப்-202017:00:43 IST Report Abuse
JMKகந்து வட்டிக்கு ரஜினி சொன்ன வரி வரி குதிரைக்கு விஜய்? இவங்களை நம்ம்பி எப்படி ஓட்டு போடறது? விளங்கிடும்...
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
08-பிப்-202013:28:18 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை தான் ஒரு நேர்மையாளன் என நிரூபித்த விஜய்க்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
08-பிப்-202013:59:18 IST Report Abuse
தாண்டவக்கோன் இது எப்படா கும்மிடி? 🤪🤣🤣🤪🤣 நீ எப்போ ஜுட்ஜ் ஆனே? உடனடியா தீர்ப்பு சொல்லிட்டியே பேஷ்..பேஷ் ....
Rate this:
Share this comment
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
08-பிப்-202014:33:50 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா ஏற்கனவே ஜோசப் விஜய் 2014லேயே 5 கோடி வருமான வரி ஏமாத்தி fine கட்டுனவன்......
Rate this:
Share this comment
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-202013:12:22 IST Report Abuse
krishna Tasmac thamizhanukkum whistle adicha kunjugalukkum pachai mattrum paavadai Thamizh nattai muzhuvadhum controlil kondu varum podhudhan muzhithu kollvargal.Ivanuga adi pattudhan saavanuga.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X