ஹார்திக் படேலுக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் கைது உத்தரவு

Updated : பிப் 07, 2020 | Added : பிப் 07, 2020 | கருத்துகள் (12)
Advertisement

ஆமதாபாத் : தேச விரோத வழக்கில் படேல் சமூக தலைவரான ஹார்திக் படேலுக்கு எதிரான கைது ஆணையை குஜராத் நீதிமன்றம் இன்று பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.






2015 ல் குஜராத் மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டங்கள் நடந்தது. இதனை படேல் சமூகத்தின் தலைவரான ஹார்திக் படேல் வழிநடத்தினார். அதில் அவருக்கு எதிராக, 2 தேச துரோக வழக்கு உட்பட 20 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேச துரோக வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக ஆமதாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பி.ஜி.கனாத்ரா ஆணையை பிறப்பித்தார். விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகவில்லை என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹார்திக் படேல் மீதான வழக்கின் விசாரணை இன்று (பிப்., 7) மீண்டும் ஆமதாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் ஹார்திக் படேல் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பேன், உண்மையான காரணம் இல்லாவிட்டால் ஒத்திவைப்பு கோர மாட்டேன் என்ற நிபந்தனையின் பேரில் நீதிமன்றம் படேலுக்கு ஜாமீன் வழங்கியது.





அந்த நேரத்தில், விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காததன் மூலமும், ஆஜராகாமல் இருப்பதன் மூலமும் படேல் தனது ஜாமீன் நிபந்தனைகளை மீறுவதாக நீதிமன்றம் அவர் மீது குற்றம் சாட்டுகிறது.

இது தொடர்பாக, படேலின் வழக்கறிஞர் கூறுகையில், நிலுவையில் இருக்கும் மற்றொரு வழக்கின் விசாரணை காரணமாக வேறு நீதிமன்றத்திற்கு அவர் சென்றுள்ளார். அதன் காரணமாகவே இன்று விசாரணைக்கு வர இயலவில்லை என கூறினார். இருப்பினும் இந்த கருத்துக்களை ஏற்க மறுத்த நீதிபதி , ஹார்திக் படேலை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
08-பிப்-202012:47:45 IST Report Abuse
R.Kumaresan ஜாதிவாரி கணக்கெடுப்பு(NPR) சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். இந்த நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுத்து சரியான முறையில் வெளியிடவும் மாட்டார்கள், ஜாதிவாரிகணக்கெடுப்புகளை வெளியிட்டாலும் சரி வெளியிடாவிட்டாலும் சரி இது போன்று பட்டேல் சமூகத்தை உயர்த்துறேன் என்று சொல்லி சண்டை சச்சரவு எதையாவது செய்து கொண்டு இருப்பவர்கள் நாட்டில் இருந்து கொண்டிருப்பார்கள்.. நரந்திரமோடி சர்தார் வல்லபாய் சிலையை திறந்துவைத்து மூடுவதைப்போல..R.Kumaresan..
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
08-பிப்-202012:11:27 IST Report Abuse
Anand இவனையெல்லாம் இன்னும் என்கவுண்டர் செய்யாமல் இருப்பது மிகப்பெரிய தவறு.
Rate this:
Share this comment
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
08-பிப்-202011:43:33 IST Report Abuse
Dr. Suriya இந்த கருங்காலிகளை உள்ள போட்டு நொங்கு எடுங்க எஜமான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X