டில்லி துணை முதல்வரின் தனி அதிகாரி கைது

Added : பிப் 07, 2020
Advertisement

புதுடில்லி : லஞ்சம் வாங்கிய வழக்கில், டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் தனி அதிகாரியை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வராக இருப்பவர் மனீஷ் சிசோடியா. இந்நிலையில், போக்கு வரத்து வாகன உரிமையாளர்கள் சிலரிடம், 2.26 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய தரகர் ஒருவரை, சி.பி.ஐ., அதிகாரிகள், கடந்த, 5ம் தேதி கைது செய்தனர், விசாரணையில், அவர் பெயர் தீரஜ் குப்தா என்பதும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள் சிலருக்காக, போக்குவரத்து வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக அதிகாரிகள் சிலர் பெயரையும், அவர் சி.பி.ஐ.,யிடம் தெரிவித்தார். இதில், டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அலுவலகத்தில், தனி அதிகாரியாக பணியாற்றும், கோபால் கிருஷ்ண மாதவ் பெயரும் இடம் பெற்றிருந்தது. இவர், டில்லி அரசின், வர்த்தகம் மற்றும் வரித்துறையில், ஜி.எஸ்.டி., அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். இதையடுத்து, நேற்று காலை, சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

கோபால் கிருஷ்ண யாதவ், 2015ம் ஆண்டில்இருந்து, சிசோடியாவின் அலுவலகத்தில் தனி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இது பற்றி சிசோடியா கூறுகையில், ''என்னுடைய அலுவலகத்தில் தனி அதிகாரியாக பணியாற்றி வந்த கோபால் கிருஷ்ண மாதவை, லஞ்ச வாங்கிய வழக்கில் கைது செய்துள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

''தவறு செய்திருந்தால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன்,'' என்றார். டில்லி சட்டசபை தேர்தல், இன்று நடக்க உள்ள நிலையில், துணை முதல்வரின் தனி அதிகாரி, லஞ்ச வழக்கில் கைதாகியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X