சப்பாத்திக்குள் ரகசிய கடிதம்

Added : பிப் 07, 2020
Share
Advertisement

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்திக்கு, அவரின் மகள் இல்திஜா முப்தி, சப்பாத்திக்குள் ரகசிய கடிதம் எழுதி அனுப்பியது தெரிய வந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை, மத்திய அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 5ல் ரத்து செய்தது.மேலும், மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக, முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த, ஆறு மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை பிரிந்து வாடும், அவரது மகள் இல்திஜா முப்தி, 'டுவிட்டரில்' ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மக்களுக்கு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் கடுமையான பொருளாதார மற்றும் உளவியல் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். என் அம்மா கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்ட அந்த வாரத்தை, ஒருநாளும் மறக்க முடியாது. அடுத்த சில நாட்கள், நான் பதற்றத்துடன் இருந்தேன். என் அம்மாவிடம் இருந்து, எனக்கு ரகசிய கடிதம் வரும் வரை, பெரும் துயரத்தில் இருந்தேன்.

என் அம்மாவுக்கு, வீட்டில் இருந்து, தினமும் 'டிபன் பாக்சில்' உணவு அனுப்பி வைக்கப்படும். அதில், ஒரு கடிதத்தை ரகசியமாக அனுப்பி வைத்தார். அந்தத் கடிதத்தில், 'உன்னை நேசிக்கிறேன்; உன்னை காணாமல் தவிக்கிறேன்' என எழுதியிருந்தார். அதற்கான பதில் கடிதத்தை, ஒரு சப்பாத்திக்குள் சிறு சதுரமாக மடித்து வைத்து அனுப்பி வைத்தேன். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.


பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது


கடந்த ஆறு மாத காலமாக வீட்டுக்காவலில் இருக்கும் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட, நான்கு பேர் மீது, பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இதன்மூலம், எந்த விசாரணையும் இன்றி, அவர்களை ஓராண்டு வரை, காவலில் வைக்கலாம் என கூறப்படுகிறது. முன்னாள் முதல்வரான, பரூக் அப்துல்லா மீது, கடந்த ஆண்டே, பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X