பொது செய்தி

தமிழ்நாடு

நடு பட்டம் கரும்பு சாகுபடி விவசாய பணிகள் தீவிரம்

Added : பிப் 07, 2020
Advertisement

மதுராந்தகம் : மெய்யூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், நடு பட்டம் கரும்பு சாகுபடியில், விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மதுராந்தகம் ஒன்றியம், மெய்யூர், சிதண்டிமண்டபம், சம்பாதிநல்லுார், பிலாப்பூர், அத்தியூர் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள், கரும்பு சாகுபடியை முதன்மை விவசாயமாக கொண்டுள்ளனர்.கடந்த அக்டோபர் மாதம் துவங்கி, ஜனவரி மாதம் வரை, முன்பட்ட கரும்பு சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்த இப்பகுதி விவசாயிகள், தற்போது, நடு பட்டம் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுஉள்ளனர். விதை புல் நடவு உள்ளிட்ட பணிகளில், தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த பருவத்திற்கு சாகுபடி செய்ய இருந்த விவசாயிகளும், கோடைக்காலம் நெருங்குவதால், பணி சுமை மற்றும் பாசனம் போன்றவற்றை கருதி, நடு பட்டம் கரும்பு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து, மெய்யூர் கரும்பு விவசாயிகள் கூறியதாவது:இப்பகுதியில், முன்பட்டம், நடுபட்டம், பின்பட்டம் என, மூன்று பருவங்களாக கரும்பு பயிரிடுவது வழக்கம். முன் பட்டம் சாகுபடியை தொடர்ந்து, நடு பட்டம் துவங்கி உள்ளோம். மார்ச் மாதத்திற்கு பின், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில், பின் பட்டம் சாகுபடி செய்யப்படும்.ஆனால், பின் பட்டம் சாகுபடி காலத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், விவசாயிகள் பலர், நடு பட்டம் சாகுபடியில் பயிரிட ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.இதே பகுதியில், சாகுபடி செய்து தயார் நிலையில் உள்ள கரும்பு விதை கரணைகளை வாங்கி வந்து, விதைப்புல்கள் நடவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X