நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்

Added : பிப் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோல்கட்டா : “நாட்டின் ஒற்றுமைக்கு, சகிப்புத்தன்மை இல்லாதது, வீம்பு மற்றும் துவேஷம் அச்சுறுத்தலாக உள்ளன,” என, மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் சட்டசபை உரையில் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே, மோதல் போக்கு இருக்கிறது. இந்நிலையில், சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, கவர்னர் ஜக்தீப் தன்கர் படித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நம் நாடு, தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது.

அரசியல் சாசனத்தின் மதிப்பீடுகளுக்கும் அடிப்படை அம்ங்களுக்கும் சவால் விடுக்கப் படுகிறது. பொய்யான தகவல்களை பரப்புவது, தினசரி நிகழ்வாக மாறிவிட்டது. தேச பக்தி என்ற பெயரில், அனைத்துவிதமான அதிருப்திகளையும் நிராகரிப்பது, புதிய 'பேஷன்' ஆகிவிட்டது. சகிப்புத்தன்மை இல்லாதது, வீம்பு மற்றும் துவேஷம் நாட்டில் பரவி வருகின்றன. அவற்றால், நம் நாட்டில் இருக்கும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.ஒரு திட்டத்தை அமல்படுத்து வதற்கு முன், நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில்கொண்டு, அத்திட்டத்தை வரையறுக்கவேண்டும்.

மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு, ஆகிய திட்டங்களை, மேற்குவங்க மாநில அரசு, கடுமையாக எதிர்க்கிறது.இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டிருந்தது. கவர்னர் உரையின்போது, திரிணாமுல் காங்., எம்.எல்.ஏ.,க்கள், சி.ஏ.ஏ., என்.சி.ஆர்., ஆகியவற்றிற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற, 'டீ சர்ட்டுகளை' அணிந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-பிப்-202006:36:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni பங்களாதேசம்ப்ளெந்து தப்பிவரும் அகதிகளால்தான் மமதாஜி அவஸ்த்தை வோட்டுக்கு நீ என்னவெல்லாம் செய்தீங்க நாடு அறியும் பிராடுத்தனம் தான் உனக்கு மூலதன m
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X