பார்லி., நேற்று...

Added : பிப் 07, 2020
Share
Advertisement

-'கொரோனா'வை கண்காணிக்க அமைச்சர்கள் குழுநம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்காணிக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், வெளியுறவுத் துறை, உள் துறை, கப்பல் மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்கள், இடம் பெற்றுள்ளனர். சீனாவில் இருந்து வந்த பயணியர், 150 பேருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது. தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்நிலை, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராஜ்யசபாவில், சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ் வர்தன்.சீன பொருட்களுக்கு வரி விதிப்புசீனாவில் இருந்து, அதிக அளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக, புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றச்சாட்டுகள் நிரூபனமாகின. இதையடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், 90 பொருட்களுக்கு, கூடுதல் பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, தடை விதிப்பது என்ற எந்த திட்டமும், மத்திய அரசிடம் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே, தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். விரிவான, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அமெரிக்காவுடன், இந்தியா எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ராஜ்யசபாவில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், பியூஷ் கோயல்.காப்பகம் திரும்பிய தத்துக் குழந்தைகள்கடந்த, 2016-2019ம் ஆண்டுகளில், மொத்தம், 9860 குழந்தைகள், தத்தெடுக்கப்பட்டனர்.

அதில், 179 குழந்தைகள், மீண்டும் காப்பகத்திற்கே திரும்பினர். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளால், புதிய குடும்பத்துடன் இணங்கி வாழ இயலாததால், பெரும்பாலான குழந்தைகள், காப்பகத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதை கட்டுக்குள் கொண்டுவர, தத்தெடுக்கும் பெற்றோருக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்படும்.கடந்த, மூன்று ஆண்டுகளில், காப்பகங்களில், குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்படுவதாக, மொத்தம், 49 புகார்கள் வந்துள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து, அதிகபட்சமாக, 18 புகார்கள் வந்துள்ளன.

குழந்தைகள் காப்பகங்களை கண்காணிக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது. லோக்சபாவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X