பொது செய்தி

தமிழ்நாடு

புத்தொளி பயிற்சி கோவில்களில் துவக்கம்

Added : பிப் 07, 2020
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஹிந்து அறநிலையத் துறை கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள், ஓதுவார்களுக்கு, சைவ திருமறை மற்றும் திவ்ய பிரபந்தம் குறித்து, பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

இதில், சைவ திருமுறை வகுப்பு, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நடக்கிறது. திவ்ய பிரபந்தம் வகுப்பு, வரதராஜ பெருமாள் கோவிலில் நடக்கிறது.சைவ திருமுறை பயிற்சியில், வேதம் மற்றும் ஆகமம், சைவ சித்தாந்தம், சில்ப சாஸ்திரம், திருமுறை வகுப்புகள் நடைபெறும். வைணவ பயிற்சியில், ஆகமம், திவ்ய பிரபந்தம், சில்ப சாஸ்திரம் போன்றவை நடத்தப்படுகின்றன.இந்த பயிற்சி நடத்தும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு பாடத்திற்கு தகுந்த ஊதியம் மொத்தமாக வழங்கப்படும். இந்த பயிற்சி, அடுத்த மாதம், 21ம் தேதி வரை நடக்கும் என, அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.இந்த புத்தொளி வகுப்பில் பங்கு பெறும் கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார், ஓதுவார்களுக்கு, ஒரு நாளைக்கு, 50 ரூபாய் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X