அசாமில் அமைதிக்கான புதிய அத்தியாயம்

Added : பிப் 07, 2020
Advertisement

கோக்ரஜ்ஹர் : ''மக்கள் அளித்த ஆதரவால் தான், 'போடோ' ஒப்பந்தம் கையெழுத்தானது; இதனால் அசாமில், அமைதிக்கான புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

அசாம் மாநிலத்தில் வசிக்கும், போடோ பழங்குடியின மக்களின் உரிமைகளை வலியுறுத்தி, என்.டி.எப்.பி., எனப்படும், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பு, ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தது.அந்த அமைப்புடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.அனுமதிக்க மாட்டோம்மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் என்.டி.எப்.பி., இடையே, அண்மையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, போடோ பழங்குடியின மக்களுக்கு, மாநில பிரிவினையின்றி, அரசியல் கட்டமைப்புக்கு உட்பட்டு, அரசியல், பொருளாதார உரிமைகள் வழங்கப்பட உள்ளன.

இதை கொண்டாடும் வகையில், அசாமில், போடோ இன மக்கள் அதிகம் வசிக்கும், கோக்ரஜ்ஹரில் நேற்று நடந்த பொது கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:மக்கள் ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தால் தான், எந்த செயலும் வெற்றி பெறும். மக்கள் தந்த அமோக ஆதரவால் தான், போடோ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், அசாமில் அமைதிக்கான புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில், அமைதி மற்றும் வளர்ச்சிக்காக, அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது.

அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை திரும்ப, இனி அனுமதிக்க மாட்டோம். ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாதிகள், நக்சலைட்கள், போடோ அமைப்பினரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை போல், வன்முறையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். வளர்ச்சியின் இன்ஜின்மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சட்டத்தால், வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர், அசாமில் குடியேறுவர் என, பொய் பிரசாரம் செய்கின்றனர்; அப்படி எதுவும் நடக்காது.

மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர்கள், வட கிழக்கு மாநிலங்களை சிறிதும் கண்டு கொள்ளவில்லை. வன்முறையை தடுக்க முயற்சிக்கவில்லை. அதனால் தான், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு, இந்திய ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும், நம்பிக்கை இல்லாமல் போனது. ஆனால், நாங்கள், நிரந்தர தீர்வு காண, கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஒரு காலத்தில், வடகிழக்கு மாநிலங்கள், பின்தங்கிய பகுதிகளாக கருதப்பட்டன. இப்போது, அவை, வளர்ச்சியின் இன்ஜினாக மாறியுள்ளன.

சில தலைவர்கள், என்னை குச்சியால் அடிக்க வேண்டும் என, பேசுகின்றனர்.ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து தாய்மார்களின் கருணையாலும், ஆசியாலும், நான் பாதுகாப்பாக உள்ளேன். அவர்களுக்கு என் நன்றியையும், மரியாதையையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X