பொது செய்தி

தமிழ்நாடு

'பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது'

Added : பிப் 08, 2020
Share
Advertisement

'தினமலர் - பட்டம்'சார்பில் நடந்த, வினாடி- வினா போட்டியில், அமெரிக்காவில் உள்ள, 'நாசா' செல்ல, செம்பாக்கம், சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.பி.தனுஸ்ரீ, ஜெ.பெரில் சியோனா ஆகியோர் தேர்வாகினர்.

எம்.பி.தனுஸ்ரீ கூறியதாவது: நாங்கள், 2019ல் நடந்த போட்டியில் பங்கேற்று, ஒரு நுாலிழையில், நாசா செல்லும் வாய்ப்பை நழுவ விட்டோம். அதனால், இந்த ஆண்டு மிகவும் உன்னிப்பாக, 'பட்டம்' இதழை படித்து வந்தோம். அனைத்து பகுதிகளும் நன்றாக உள்ளன. இதில், 'பதில் சொல்' பகுதியை விரும்பி படிப்பேன். அனைத்து விளையாட்டுகளையும் சார்ந்த செய்திகள், பொது அறிவை வளர்ப்பதாக உள்ளன. உணவின் வரலாறு சார்ந்த தகவல், திங்கள்கிழமை மட்டுமே வருகிறது; தினமும் வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். 'பட்டம்' இதழ் மட்டுமின்றி, பள்ளி நுாலகத்துக்கும் சென்று பொது அறிவு சார்ந்த பகுதிகளை விரும்பி படிப்பேன்.

அவை, இந்த போட்டியில் வெற்றி பெற, பெரிதும் உதவியது.ஜெ.பெரில் சியோனா கூறியதாவது:'பட்டம்' இதழில், மிகவும் எளிய தமிழில், பலதுறைகளைச் சேர்ந்த விஷயங்கள் வெளிவருகின்றன.முன்பெல்லாம், செய்தித் தாள்களை படிக்கவே பிடிக்காது. இப்போது, செய்திகளின் சாராம்சத்தை படித்து விடுவதால், செய்தித்தாள் படிப்பது, எளிதாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இருவரும் விளையாட்டு நேரத்தில் கூட, புதிய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். இந்த போட்டியில், 'பட்டம்' இதழில் இருந்தே வினாக்கள் வந்ததால், எங்களால், எளிதாக வெற்றிபெற முடிந்தது.

நாசா செல்லும் வாய்ப்பை நினைக்கும்போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.---------------------'எங்களை ஈர்த்தது பட்டம்'பட்டம் இதழில் வெளியாகும் அறிவியல் சார்ந்த பகுதிகள் மிகவும் சுவையாக உள்ளன. படக்கதைகளை தொடர்ந்து படிக்க வேண்டும்என்ற ஆர்வம் ஏற்படுகிறது. மற்ற துறைகள் சார்ந்த கலைச்சொற்களை, தமிழில் படிக்கும்போது, ஆங்கில வழி கல்வி படிப்போருக்கு உதவியாக உள்ளது. இதில் இடம்பெறும் செய்முறை பகுதிகளை செய்து பார்ப்பதால், கற்பனைத்திறன் வளர்கிறது. அறிவியல் பாடங்களை மிகவும் எளிமையாக விளக்குவதால், நன்கு புரிகிறது.

இப்படியாக, 'பட்டம்' இதழ் எங்களை ஈர்த்ததால் தான், இந்த போட்டியில், எங்களால் இரண்டாம் இடம் பிடிக்க முடிந்தது.இரண்டாம் பரிசு பெற்ற, சென்னை, குரோம்பேட்டை, செயின்ட் மார்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பி.பழனிகுமரன், கே.நிகில்குமார்.----------------------------------- 'இஸ்ரோ செல்ல ஆசை!'நாங்கள், தினமும், வினாடி - வினா போட்டிக்காக, பட்டம் இணைப்பிதழை படித்து வந்தோம். இந்த போட்டியில் பங்கேற்று மேடையேறினால் போதும் என்ற மனநிலை தான் இருந்தது.

கேள்விகள் சவாலாக இருந்தன. எங்களின் தொடர் முயற்சிக்கு, மூன்றாவது இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. 'நாசா'வை விட, 'இஸ்ரோ'வை தான் பார்க்க விரும்புகிறோம்.-மூன்றாம் இடம் பிடித்த, சென்னை, நங்கநல்லுார், பி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஏ.தினேஷ்குமார், எஸ்.விஷால்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X