பரனூர் சுங்கச்சாவடி ஒப்பந்தம் ரூ., 50 லட்சம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரனூர் சுங்கச்சாவடி ஒப்பந்தம் ரூ., 50 லட்சம்

Added : பிப் 08, 2020
Share

சென்னை : பரனுார் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க, புதிய நிறுவனத்தை நியமிக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனுாரில், சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. நாள்தோறும், 50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலானது. கட்டணம் வசூலிப்பு தொடர்பாக, சமீபத்தில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அரசு பஸ் டிரைவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, மோதலில் முடிந்தது. பயணியரால், சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், ஜன., 27 முதல், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாமல், வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, சுங்க கட்டணம் வசூலிக்கும், மஹாராஷ்டிராவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் இம்மாத இறுதியுடன் முடிகிறது. எனவே, புதிய நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான பணிநடக்கிறது. இதற்காக, ஓராண்டுக்கு, 111 கோடி ரூபாய் ஒப்பந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.'ஒப்பந்தம் பெறும் நிறுவனம், வாரத்திற்கு ஒரு முறை, வசூல் தொகையை செலுத்தி, 111 கோடி ரூபாயை ஈடு செய்ய வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்து உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X