அசாமில் அமைதிக்கான புதிய அத்தியாயம்: 'போடோ' ஒப்பந்தம் குறித்து பிரதமர் பெருமிதம்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (8+ 23)
Advertisement
modi, assam, podo, agreement, பிரதமர்மோடி, போடோ, ஒப்பந்தம், அசாம்

கோக்ரஜ்ஹர்: ''மக்கள் அளித்த ஆதரவால் தான், 'போடோ' ஒப்பந்தம் கையெழுத்தானது; இதனால் அசாமில், அமைதிக்கான புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

அசாம் மாநிலத்தில் வசிக்கும், போடோ பழங்குடியின மக்களின் உரிமைகளை வலியுறுத்தி, என்.டி.எப்.பி., எனப்படும், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பு, ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தது. அந்த அமைப்புடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.


அனுமதிக்க மாட்டோம்

மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் என்.டி.எப்.பி., இடையே, அண்மையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, போடோ பழங்குடியின மக்களுக்கு, மாநில பிரிவினையின்றி, அரசியல் கட்டமைப்புக்கு உட்பட்டு, அரசியல், பொருளாதார உரிமைகள் வழங்கப்பட உள்ளன.இதை கொண்டாடும் வகையில், அசாமில், போடோ இன மக்கள் அதிகம் வசிக்கும், கோக்ரஜ்ஹரில் நேற்று நடந்த பொது கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: மக்கள் ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தால் தான், எந்த செயலும் வெற்றி பெறும். மக்கள் தந்த அமோக ஆதரவால் தான், போடோ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், அசாமில் அமைதிக்கான புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில், அமைதி மற்றும் வளர்ச்சிக்காக, அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது.

அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை திரும்ப, இனி அனுமதிக்க மாட்டோம். ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாதிகள், நக்சலைட்கள், போடோ அமைப்பினரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை போல், வன்முறையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.


வளர்ச்சியின் இன்ஜின்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சட்டத்தால், வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர், அசாமில் குடியேறுவர் என, பொய் பிரசாரம் செய்கின்றனர்; அப்படி எதுவும் நடக்காது. மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர்கள், வட கிழக்கு மாநிலங்களை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.

வன்முறையை தடுக்க முயற்சிக்கவில்லை. அதனால் தான், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு, இந்திய ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும், நம்பிக்கை இல்லாமல் போனது. ஆனால், நாங்கள், நிரந்தர தீர்வு காண, கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஒரு காலத்தில், வடகிழக்கு மாநிலங்கள், பின்தங்கிய பகுதிகளாக கருதப்பட்டன. இப்போது, அவை, வளர்ச்சியின் இன்ஜினாக மாறியுள்ளன. சில தலைவர்கள், என்னை குச்சியால் அடிக்க வேண்டும் என, பேசுகின்றனர்.

ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து தாய்மார்களின் கருணையாலும், ஆசியாலும், நான் பாதுகாப்பாக உள்ளேன். அவர்களுக்கு என் நன்றியையும், மரியாதையையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (8+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SELF -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-202022:43:18 IST Report Abuse
SELF மோடி பற்றிய வெளி நாட்டு பத்திரிகை யின் பாராட்டு இதோ படியுங்கள்.Thanks : Kamatchi Thevar Maharajanநமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களைப் பற்றி அமெரிக்க Times Magazineல் எழுதியுள்ளது. மோடி யார் தெரியுமா? இந்த உலகை கட்டுபடுத்த வந்து இருக்கும் ஆண்மகன்! நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசப் ஹோப் கருத்து தெரிவித்துள்ளார்.மோடியின் ஒரே நோக்கம் இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்குவதே. இவரை தடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இந்தியா உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் விட மிகச் சக்தி வாய்ந்த தேசமாக மாறும்,அது அமெரிக்கா,இங்கிலாந்து, ரஷ்யா ஆச்சரியப்படுத்தும்.மோடி ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி கடந்து செல்கிறார், அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது.சிரிக்கும் முகத்தின் பின்னால் ஒரு ஆபத்தான தேசபக்தர் . அவர் உலகின் அனைத்து நாடுகளையும் தன் தேசம் இந்தியாவின் நலனுக்காக பயன்படுத்துகிறார்.பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான அமெரிக்க உறவை அழித்துவிட்டார், வியட்நாமுடன் கூட்டணியை உருவாக்கி சீனாவின் வல்லரசுக் கனவை உடைத்து மூன்று நாடுகளின் பயன்பாட்டை மோடி உருவாக்கிவிட்டார்.வியட்நாமுக்கும் சீனாவிற்கும் கடற்பரப்பில் எண்ணெய் எடுப்பதில் நீண்ட காலமாக உள்ள தகறாறை இந்தியாவிற்கு சாதகமாக்கி,இந்தியாவின் துணையுடன் வியட்நாம் சீனாவின் தெற்கு கடற்பரப்பில் எண்ணெய் உற்பத்தி செய்யத் தொடங்கியது, அதன் எண்ணெய்கள் அனைத்தையும் இந்தியாவுக்கு வழங்குகிறது இதற்கு அமெரிக்கா வேறு ஆதரவு.பாகிஸ்தானை ஒரு ஏழை நாடாக மாற்றிவிட்டார்.ஈரானின் துறைமுகத்தை தன் கைபிடிக்குள் கொண்டு வந்து விட்டார்.. ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானைப் பிரிக்கும் பகுதிக்கு மிக அருகில் ஆப்கான் எல்லையில் ஒரு இந்திய இராணுவ நிலையத்தை உருவாக்கி உள்ளார்.இந்திய வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் ஈரான் மூலம் (பாகிஸ்தானை விட்டுவிட்டு) ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பாதையையும் கட்டியுள்ளார்.மோடியின் ஆசைகள் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது, 370 மற்றும் 3 ஏ பிரிவுகளை ரத்து செய்து விட்டார். ஒரு நாள், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முற்றிலும் கைப்பற்றி விடுவார். வரும் காலங்களில் பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக விழும். இது மோடியின் எச்சரிக்கை யின் பேரில் நடக்கும்.பாகிஸ்தானைப் பிரிப்பதில் பாகிஸ்தானின் பாரம்பரிய நட்பு நாடான சவுதி அரேபியாவும் முக்கிய பங்கு வகிக்கும்.ஆசியாவில், சீனாவையும், அமெரிக்காவையும் முடித்த இந்த மனிதர், சார்க் மாநாட்டை ரத்து செய்து தனது சக்தியை உலகுக்குக் காட்டினார். ஆசியாவை விட இந்தியாவின் மேன்மையை நிலை நிறுத்துவதில் மோடி வெற்றி பெற்று உள்ளார்,இந்த செயலை ஆசியாவின் இரண்டு பெரிய சக்திகளான ரஷ்யா மற்றும் ஜப்பானும் இதற்கு எதுவும் சொல்ல வில்லை இரண்டு நாடுகளையும் மிக துல்லியமாக தன் கையில் வைத்துக் கொண்டார், சீனாவின் வியட்நாம் எண்ணெய்ப் பிரச்சினையில் எண்ணெய்கள் தங்களுக்கு வேண்டும் என சீனா கேட்கும் அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்பார், கேட்பார் என்ன நான் எடுத்து கொள்கிறேன் நீ வாய் முடி இரு என்று சொல்லி சீனாவின் வியட்நாம் பிரச்சினையை சீண்டுவார்.. சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த நபர் இந்திய அரசியலை வேறு நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.ஒவ்வொரு நாட்டிற்கும் பல எதிரிகள் இருப்பதாக பல நாடுகள் நினைத்து செயல்படுகின்றனஆனால் இந்தியாவுக்கு பாகிஸ்தானைத் தவிர வேறு எதிரிகள் இல்லை. உலகின் அனைத்து நாடுகளிடமும் இந்தியா நண்பர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்த மனிதன் உண்மையான போரை விட பாகிஸ்தானுக்கு அதிக இழப்பு செய்து இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக முஸ்லீம் நாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், மோடி தன்னை உலகின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக நிரூபித்துள்ளார்.பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் செய்தால் கூட இவ்வளவு இழப்பு வராது. ஆனால் இப்போது அதை விட அதிகமாக இழப்பை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.அனைத்து நாடுகளுடனானபேச்சுவார்த்தைகள் அனைத்திலும், இந்த நபரின் நேர்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் உலகின் பிற பகுதிகளுக்கு கடினமாக இருக்கும்.இந்தியாவின் தற்போதையஅசுர வளர்ச்சி, ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அனைத்து நாடுகளையும் ஆச்சரியப்படுத்தும்VR
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
08-பிப்-202013:02:37 IST Report Abuse
தாண்டவக்கோன் அருமை..இது போற்றப்பட வேண்டிய சாதனை தான்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
08-பிப்-202009:18:52 IST Report Abuse
blocked user தீவிரவாதம் செய்தவர்கள் அமைதியாக சமாதானம் அடைவது சிறப்பு. 60 ஆண்டுகளாக ஒரு அரசும் செய்ய முடியாததை செய்து காட்டி சாதனை படைத்தது இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X