பொது செய்தி

இந்தியா

'எதுவும் என் நாட்டிற்கே'; நாசா அழைப்பை நிராகரித்த இந்திய இளைஞர்

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
பாகல்பூர்: பீஹார் மாநிலத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி கோபால்ஜியின் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரை அமெரிக்க வின்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா' அழைத்து உள்ளது.பாராட்டு:பீஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள துருவ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த கோபால் ஜி, 19, பி.டெக்., படிக்கிறார். சிறு வயது முதல் அறிவியல் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். கோபால்ஜி,
NASA,GopalJee,Youngest_Scientist,India,நாசா,இளைஞர்

இந்த செய்தியை கேட்க

பாகல்பூர்: பீஹார் மாநிலத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி கோபால்ஜியின் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு, அவரை அமெரிக்க வின்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா' அழைத்து உள்ளது.


பாராட்டு:


பீஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள துருவ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த கோபால் ஜி, 19, பி.டெக்., படிக்கிறார். சிறு வயது முதல் அறிவியல் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். கோபால்ஜி, 10ம் வகுப்பு படித்தபோது, வாழை இலை மற்றும் காகிதத்தில் இருந்து 'பயோசெல்'களை கண்டுபிடித்ததற்காக, அவருக்கு 'இன்ஸ்பயர் விருது' தரப்பட்டது.

கிழக்காசிய நாடான தைவானின் தலைநகர், தைபேவில் நடந்த கண்காட்சியில், கோபால்ஜியின் கண்டுபிடிப்பை பார்த்து, பல நாடுகளின் நிறுவனங்கள் அவரை அழைத்தன. இதற்கிடையே, 2017, ஆகஸ்ட், 31ல் பிரதமர் நதேந்திர மோடி, கோபால்ஜியை அழைத்து பாராட்டினார். இந்த சந்திப்புக்கு பின், ஆமதாபாதில் உள்ள, 'நேஷனல் இன்னொவேஷன் பவுன்டேஷனு'க்கு அனுப்பப்பட்ட கோபால்ஜி, அங்கு, 34 அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக்கியதுடன், இரண்டுக்கு காப்புரிமை பெற்றார்.


latest tamil news




விருப்பம்:


இந்நிலையில், கோபால்ஜிக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இது குறித்து, அவர் கூறியதாவது: நான் கண்டுபிடித்த, மிக உயர் வெப்பநிலையை தாங்கும் 'கோபோனியம் அலாய்' குறித்து அறிந்த அமெரிக்க விஞ்ஞானிகள், என்னை சந்தித்தார்கள். நாசாவில் இருந்தும், எனக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், எதையும் என் நாட்டிற்காக செய்யவே விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
14-பிப்-202021:00:52 IST Report Abuse
bal அவ்வளவுதான்...இந்த பையனுக்கு தெரியாது இங்கு இட ஒதுக்கீட்டிற்குப்பின்தான் இவனுக்கு வாய்ப்பு கிடைக்குமென்று....இன்னும் பத்து வருடம் கழித்து பாருங்கள்...இவன் பாவம் ஒதுக்கி விட்டார்கள் என்று செய்தி வரும்....
Rate this:
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
14-பிப்-202016:27:59 IST Report Abuse
Jaya Ram இப்படித்தான் எதிர்கால தலைமுறை அமையவேண்டும்
Rate this:
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
10-பிப்-202018:46:49 IST Report Abuse
Sampathkumar Sampath சூப்பர்டா தம்பி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X