மேடு, பள்ளமாக மாநில நெடுஞ்சாலை: தடுமாற்றத்துடன் செல்லும் வாகனங்கள்

Added : பிப் 08, 2020
Advertisement

பொன்னேரி : கனரக வாகனங்களால், மாநில நெடுஞ்சாலை மேடு, பள்ளமாக மாறி உள்ளதால், வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்வதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.

பொன்னேரி- - மீஞ்சூர் இடையே, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டன. இந்த சாலை வழியாக, தினமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.அத்திப்பட்டு புதுநகர் மற்றும் காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் துறைமுகம், நிலக்கரி கிடங்கு, ஆயில் மற்றும் எரிவாயு நிலையங்களில் இருந்து, அதிக சுமையுடன் கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன.தொடர் வாகன போக்குவரத்தால் சாலை, மேடு, பள்ளமாக மாறி உள்ளது.உத்தண்டிகண்டிகை, வேண்பாக்கம், பொன்நகர், அரசு கல்லுாரி அருகில் என, பல்வேறு இடங்களில் சாலை பழுதடைந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளங்கள் உள்ள பகுதிகளை கடக்கும்போது, நிலை தடுமாறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர்.தடுப்பு சுவரை ஒட்டி செல்லும் வாகனங்கள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்காக இடதுபுறம் திரும்பும்போது, சாலையில் உள்ள பள்ளங்களால் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.கனரக வாகனங்கள் அதிக சுமையுடன் செல்வதை கட்டுப்படுத்தவும், சேதம் அடைந்து கிடக்கும் பகுதிகளை சீரமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X