சாலை ஆக்கிரமிப்பு போர்டுகள் அகற்ற நடவடிக்கை தேவை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை ஆக்கிரமிப்பு போர்டுகள் அகற்ற நடவடிக்கை தேவை

Added : பிப் 08, 2020
Share

மந்தாரக்குப்பம்:மந்தாரக்குப்பம் கடை வீதியில் சாலை ஆக்கிரமிப்பு போர்டுகளை அகற்ற போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட கடைகள், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. சில வியாபாரிகள் மீண்டும் தற்காலிமாக தார்பாய் அமைத்தும், சாலையில் விளம்பர போர்டுகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கினர்.இதனால் சாலை குறுகலாகி கடை வீதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

தினசரி இப்பகுதியில் 5 கி.மீ., உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகள், விளம்பர போர்டுகளை அகற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X