சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஜய் படப்பிடிப்பிற்கு பா.ஜ., எதிர்ப்பு ரசிகர்கள் மீது பாதுகாப்பு படை தடியடி

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 விஜய் படப்பிடிப்பிற்கு பா.ஜ., எதிர்ப்பு  ரசிகர்கள் மீது பாதுகாப்பு படை தடியடி

நெய்வேலி : என்.எல்.சி., சுரங்கத்தில், படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.

நடிகர் விஜயை காண முண்டியடித்த ரசிகர்களை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், தடியடி நடத்தி கலைத்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி, என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில், விஜய் நடிக்கும், மாஸ்டர் படப்பிடிப்பு, நான்கு நாட்களாக நடந்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட இடமான இச்சுரங்கத்தில், படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மாலை, பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.என்.எல்.சி., அதிகாரிகளிடம், 'பாதுகாக்கப்பட்ட இடமான, சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது எப்படி? படப்பிடிப்பு நடத்த, தொடர்ந்து அனுமதித்தால், போராட்டத்தில் ஈடுபடுவோம்' எனக் கூறி, கலைந்து சென்றனர்.

அதை தொடர்ந்து, பா.ஜ., போராட்டத்தை கண்டித்தும், நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், இரண்டாம் சுரங்க நுழைவு வாயிலில், வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாலை, 6:30 மணியளவில், படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த விஜயை பார்க்க, சுரங்க நுழைவு வாயில் முன் உள்ள, 'மெயின் கேட்' மீது ரசிகர்கள் ஏறி, முண்டியடித்தனர்.பாதுகாப்பு பணியிலிருந்த, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், ரசிகர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-பிப்-202018:04:40 IST Report Abuse
Bhaskaran பணம் வாங்கிக்கொண்டு அனுமதியளித்த நிர்வாகம் மத்திய அரசின் கீழுள்ளது என்பதை காவி மறந்ததேனோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X