சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைக்கடையில் 50 பவுன் கொள்ளை

Added : பிப் 08, 2020
Advertisement

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே நகைக்கடை பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் 3கிலோ வெள்ளியை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
திருவட்டார் அருகே முனவிளையை சேர்ந்தவர் பரமசிவம் 57. இவர் பூவன்கோடு பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. கடைக்குள் சென்ற போது அங்கிருந்த 50 பவுன் நகை மற்றும் மூன்று கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றிருந்தனர்.கடையில் மிளகாய்பொடி வீசப்பட்டிருந்தது. விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

கடையில் இருந்த கேமரா மற்றும் பக்கத்தில் உள்ள அனைத்து கேமராக்களிலும் உள்ள பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.ஜன.28ல் மார்த்தாண்டத்தில் ஒரு நகைக்கடையில் 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X