அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' சினிமா டிக்கெட் தமிழகத்தில் விரைவில் அமல்

Added : பிப் 08, 2020
Advertisement

நாகர்கோவில் : ''ஆன்லைன் டிக்கெட் முறை அமலுக்கு வரும் போது, சினிமாத் துறையில், வசூலின் உண்மைத்தன்மை வெளிவரும்,'' என, செய்தி துறை அமைச்சர் ராஜு கூறினார்.

கன்னியாகுமரியில் அவர் அளித்த பேட்டி:ஆண்டுதோறும், 1,600 மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வகையில், ஒரே ஆட்சி காலத்தில், 11 மருத்துவக் கல்லுாரிகள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது வரலாற்று சாதனை. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு, குமரி மாவட்டம், தோவாளையில் மணிமண்டபம் அமைக்கப்படும். பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க, பூர்வாங்க பணிகள் முடிந்துள்ளன.

சினிமாத் துறையில், 'ஆன்லைன்' டிக்கெட் விற்பனை என்பது, அரசின் கொள்கை முடிவு. ஒரு சினிமாவுக்கு எவ்வளவு பணம் வசூலாகியுள்ளது என்பது, இதன்மூலம் தெரியவரும். விரைவில், இந்தியாவில், முதல் முறையாக, தமிழகத்தில், 'ஆன்லைன்' திரைப்பட டிக்கெட் விற்பனை வர உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X