'கொரோனா'வுக்கு சீனாவில் 636 பேர் உயிரிழப்பு; முதலில் எச்சரித்த டாக்டரும் பலியான பரிதாபம்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement
coronavirus, china, doctor, கொரோனா, சீனா, உயிரிழப்பு, 636 பேர், டாக்டர்,

பீஜிங்; அண்டை நாடான சீனாவில் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 636 பேர் பலியாகியுள்ளார். இந்த வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த டாக்டரும் வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சீனாவில் கொரோனா எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. இங்குள்ள மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய லீ வென்லியாங் 34 கடந்த டிசம்பர் இறுதியில் ஒரு நோயாளியை பரிசோதித்தபோது அவருக்கு வித்தியாசமான வைரஸ் தாக்குதல் இருந்ததை கண்டறிந்தார்.

அது 'சார்ஸ்' வைரசாக இருக்கலாம் என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. இது தொடர்பாக உடன் பணியாற்றிய டாக்டர்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார். சமூக வலைதள பக்கத்திலும் இது குறித்து தகவல்களை பதிவிட்டார்.

ஆனால் சீன அரசு அவரது எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியது. வதந்தியை பரப்புவதாக கூறி அவரை கண்டித்த அரசு அவரிடம் 'இதுபோன்ற வதந்தியை இனி பரப்ப மாட்டேன்' என்று உறுதிமொழி கடிதத்தையும் எழுதி வாங்கியது. ஆனால் அடுத்த சில நாட்களிளிலேயே கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை சீன அரசு உறுதி செய்தது.

இதற்கிடையே டாக்டர் லீ வென்லியாங்கிற்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 10ல் அவருக்கு இருமல் ஏற்பட்டது. அடுத்த நாள் காய்ச்சல் வந்தது. அதற்கு அடுத்த நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

டாக்டர் லீ கடைசியாக இந்த மாதம் முதல் தேதியில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை உறுதி செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். லீயின் மறைவு சீன மக்களிடமும் டாக்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டர் லீக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மக்களிடையே கடும் விமர்சனம் எழுந்துள்ளதை அடுத்து இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே சீனாவில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 73 பேர் பலியாகினர். இதையடுத்து பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஜப்பானில் கப்பல்


சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து கிழக்காசிய நாடான ஜப்பானுக்கு 3,700 பயணியருடன் 2 வாரங்களுக்கு முன் ஒரு கப்பல் வந்தது. யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த இந்த கப்பலில் இருந்த பயணியருக்கு நடந்த சோதனையில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பயணியருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 61 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து வந்த மற்றொரு கப்பலை ஜப்பான் அதிகாரிகள் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி மறுத்து திரும்ப அனுப்பினர். ஹாங்காங்கிலும் 15 நாட்களாக ஒரு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு


ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.எஸ்.வாசன் என்ற விஞ்ஞானி தலைமையிலான குழு கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. வில் இந்த ஆய்வு நடக்கிறது. வாசன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி. எனப்படும் இந்திய அறிவியல் ஆய்வு மையத்தில் உயர் கல்வி படித்தவர்.

மத்திய ஆசிய நாடான தென் கொரியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி கேபியோங் என்ற நகரில் உள்ள தேவாலயத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு நேற்று திருமணங்கள் நடந்தன. மணமக்களில் சிலர் முகமூடி அணிந்தபடி பங்கேற்றனர்.

ஆசிய நாடான தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்த வருவோர் முகமூடி அணியும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் சிலர் முகமூடி அணிய மறுப்பதால் அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செயல்படும் ஹாங்காங் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 400 ஊழியர்களை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. சீனாவின் குன்மிங் விமான நிலையத்தில் தவிக்கும் 21 இந்திய மருத்துவ மாணவ-ர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

கொரோனா பீதி காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 'பார்சல்' செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
08-பிப்-202010:37:40 IST Report Abuse
blocked user "உறுதிமொழி கடிதத்தையும் எழுதி வாங்கியது" - சீன நண்பர் இந்த மருத்துவரை காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியதாக சொல்கிறார். அந்த காவல் நிலையமே காலியாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X