'டிக் டாக்' ஆசாமிகளால் தொல்லை: பொற்கோவிலில் 'மொபைலுக்கு' தடை

Added : பிப் 08, 2020
Advertisement

சண்டிகர் : அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில், பக்தர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில், சீக்கியர்களின் புனித பொற்கோவில் அமைந்துள்ளது. இங்கே, மொபைல் போன்கள் பயன்படுத்துவது தடை செய்யப் பட்டுள்ளது.இதுகுறித்து, பொற்கோவில் நிர்வாகி கியானி ஹர்பிரீத் சிங், நேற்று கூறியதாவது:'டிக் டாக்' செயலி இந்தியா உட்பட, உலகளவில், மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில், 20 கோடி இளைஞர்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.பொற்கோவிலில், புகைப்படம், 'வீடியோ' எடுக்கக்கூடாது எனக்கூறியும் சிலர் மீறுகின்றனர்.

கோவிலின் தர்பார் சாஹிப் வளாகத்திற்குள் எடுத்த, நடன வீடியோவை ஒரு பெண் டிக் டாக் செயலியில் வெளியிட்டார். பின், தன் நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்டார்.அதுபோல், மூன்று பெண்கள் பஞ்சாபி பாடலுடன், கோவிலில் எடுத்த வீடியோவை, டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவிலுக்கள், மொபைல் போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X