பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா அறுவடையால் விருதை மார்க்கெட் கமிட்டி 'ஹவுஸ்புல்' விளைபொருள் கொண்டு வர வேண்டாம் என கோாிக்கை

Added : பிப் 08, 2020
Advertisement
 சம்பா அறுவடையால் விருதை மார்க்கெட் கமிட்டி 'ஹவுஸ்புல்' விளைபொருள் கொண்டு வர வேண்டாம் என கோாிக்கை

விருத்தாசலம்:சம்பா அறுவடை தீவிரமடைந்து நெல் வரத்து அதிகரித்துள்ளதால், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி ஹவுஸ்புல்லானது.

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நெல், உளுந்து, வேர்க்கடலை, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சாதாரண நாட்களில் 1,000 முதல் 3,000 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வரும். ஆனால், சீசனில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் குவிந்து விடும்.

தற்போது, சம்பா அறுவடை தீவிரமடைந்த நிலையில், இரண்டு வாரங்களாக நெல் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் தினசரி 9,000 நெல் உட்பட 10 ஆயிரம் அளவிலான மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்து, வெளியேற்ற முடியும் நிலை உள்ளது. ஆனால், 15 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால், அடுக்கி வைக்க முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது.

இதற்காக, கமிட்டிக்குள் விற்பனைக்கு வரும் வேளாண் விளைபொருட்களுடன் கூடிய வாகனங்கள், பூந்தோட்டம் சாலையில் உள்ள நுழைவு வாயில் வழியாகவும், கொள்முதல் செய்த மூட்டைகளுடன் வெளியே செல்லும் வாகனங்கள், கடலுார் சாலையில் உள்ள பிரதான வாயில் வழியாகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் கமிட்டி வளாகத்தில் வாகன நெரிசல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று நெல் 11,000, உளுந்து 500 உட்பட 11,813 மூட்டை வேளாண் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், எள் 7,929 ரூபாய்க்கும், தட்டைப் பயறு 7,789, நெல் வகையில் பி.பி.டி., 1,584 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன.இரு நாட்களுக்கு வர வேண்டாம்மார்க்கெட் கமிட்டியில் நெல் வரத்து அதிகமாக இருப்பதால், நேற்றைய கொள்முதலுக்கு தேவையான நெல் மூட்டைகள், நேற்று முன்தினம் இரவு, இருப்பு வைக்கப்பட்டு விட்டன.

இருப்பினும் தினசரி இரவு 7:00 மணி முதல், அதிகபட்சமாக நெல் மூட்டைகள் வரத்து இருப்பதால், அவற்றை அடுக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், இன்று (8ம் தேதி) மற்றும் நாளை (9ம் தேதி) இரவு 10:00 மணி வரை நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் எனவும், நாளை மறுநாள் (10ம் தேதி) கொள்முதலுக்கு, ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணிக்கு மேல் நெல் மூட்டைகளை கொண்டு வருமாறு விவசாயிகளுக்கு கமிட்டி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X