பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி :முதல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

Added : பிப் 08, 2020
Advertisement
 ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி  :முதல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் துவக்கப்பட்டு, முதல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.

ஒன்றிய தலைவர் லதா ஜெகஜீவன்ராம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணைத்தலைவர் திருச்செல்வம் வரவேற்றார்.

கூட்டத்தில், ஸ்ரீமுஷ்ணத்தை தனி ஊராட்சி ஒன்றியமாக அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், ஒன்றியத்துக்குட்பட்ட நிதி, அலுவலக பணியாளர்கள், புதிய ஒன்றிய அலுவலக கட்டடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர கோருதல், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து போதிய பஸ் வசதி ஏற்படுத்துதல் மற்றும் அரசு நலத்திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும்

வீடுகள் கட்ட மணல் குவாரி அமைக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.இதில் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X