சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனத்துறையினர் மீது தாக்குதல் நீலகிரியில் 6 பேர் கைது

Added : பிப் 08, 2020
Advertisement

பந்தலுார் : பந்தலுார் அருகே, நெலாக்கோட்டைபகுதியில், யானைகண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, பிதர்காடு வனச்சரகம் நெலாக்கோட்டை, விலங்கூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு வனக்காப்பாளர் ராமச்சந்திரன், யானை கண்காணிப்பு குழுவை சேர்ந்த விஷ்ணு, வைசாக் உள்ளிட்ட வனத்துறையினர் யானை நடமாட்டம் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சிலர் யானைகள் வந்து செல்லும் சாலையில் அமர்ந்து, மது அருந்திக் கொண்டிருந்தனர். அதை பார்த்த வனத்துறையினர், 'யானைகள் வருவதால் இங்கே அமர்ந்து மது அருந்த கூடாது' என, எச்சரித்துள்ளனர்.

அப்போது இளைஞர்கள், 'யானைகள் தாக்கினால் இறப்பது நாங்கள் தான். உங்கள் வேலையை பார்த்து செல்லுங்கள்' என, வனத்துறையினரை மிரட்டியுள்ளனர்.அவர்களை சமாதானப்படுத்தி அகற்ற முயன்ற வனத்துறையினர் மீது, தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த வனத்துறை ஊழியர்கள் மூவர்,கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக, பிரதீப், 20, கார்த்திக்,21, பிரசாந்த்,21, மணிகண்டன்,24, சந்துரு,21, சதீஷ்,23 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X