கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நெடுங்காடு தொகுதி தேர்தல் காங்., வேட்பாளர் மனு தள்ளுபடி

Added : பிப் 08, 2020
Share
Advertisement

சென்னை : புதுச்சேரி, நெடுங்காடு சட்டசபை தொகுதியில், என்.ஆர்.காங்கிரஸ், எம்.எல்.ஏ., வெற்றியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த, ௨௦௧௬ல் புதுச்சேரி மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது, நெடுங்காடு தனி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் மாரிமுத்து, என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் சந்திரபிரியங்கா உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், சந்திரபிரியங்கா வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து, மாரிமுத்து தாக்கல் செய்த மனு:தேர்தலின் போது, நடத்தை விதிகள் மீறப்பட்டன. இதை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்தனர்.

வேட்புமனுவில், பல தகவல்களை சந்திரபிரியங்கா மறைத்துள்ளார். அவரது பெற்றோர், புதுச்சேரியில் வசிக்கின்றனர். திருமணத்துக்கு பின், தமிழகத்தில், சந்திரபிரியங்கா குடியேறி விட்டார். புதுச்சேரியில் போட்டியிட, அவருக்கு தகுதியில்லை. அவரது தேர்தல் செல்லாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.விசாரித்த, நீதிபதி ரவிச்சந்திரபாபு, 'தேர்தல் வழக்கில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை, மனுதாரர் நிரூபிக்கவில்லை. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளரின் தேர்வில் குறுக்கிட முடியாது.

இவ்வழக்கில் நிவாரணம் பெற, மனுதாரரக்கு, உரிமை இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X