தமிழ்நாடு

55 ஆண்டுகளுக்கு பின் இன்று தெப்பத்திருவிழா : 'தினமலர்' செய்தியால் நடவடிக்கை

Added : பிப் 08, 2020
Share
Advertisement

சின்னமனுார், :சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தைப்பூச தெப்ப திருவிழா, 55 ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கவுள்ளது. 'தினமலர்' செய்தி எதிரொலியாக அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையானது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்று 6 கால பூஜைகள் உள்ளிட்ட ஐதீகங்கள் பின்பற்றப்படுகிறன. தைப்பூசத்தன்று கோயிலின் எதிரேயுள்ள சிவகங்கை தெப்பத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளல் நடைபெறும். கடந்த 55 ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரச்னையால் தெப்பத்திருவிழா நடைபெறுவது தடைபட்டது.இந்தாண்டு தெப்பத்திருவிழா நடைபெறுமா என்று 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன் தெப்ப திருவிழா நடத்த அறநிலையத்துறை அனுமதி வழங்கியது. தண்ணீர் நிரப்பி, சுற்றுச்சுவர்கள் அலங்கரிக்கப் பட்டுள்ளதால், தெப்பம் புதுப் பொலிவு பெற்றுள்ளது.வர்த்தக பிரமுகர் துர்கா.வஜ்ரவேல் கூறுகையில், ''தெப்ப திருவிழா நடைபெறாததால் ஐதீகம் மீறப்படுவதாக பக்தர்கள் மனம் வருந்தினர். இது குறித்த 'தினமலர்' செய்தியால், பக்தர்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது. இன்று காலை முருகன் வள்ளி, தெய்வானையுடன் நகர்வலம் வருதல் நடைபெறும். மாலை 4:00 மணிக்கு மேல் தெப்பத்தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளல் நடைபெறும். அதன்பின் தெப்பத் திருவிழா நடைபெறும். அறநிலையத்துறை அனுமதி கிடைத்துள்ளதால், தொடர்ந்து தெப்ப திருவிழா நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X