எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

ரயில்வே வருமானத்தை உயர்த்த மோடி யோசனை

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
''சூரிய மின் சக்தி, ரயில் - சாலை இணைப்பு, புனித யாத்திரை பயணம் போன்றவற்றின் வழியாக, ரயில்வேயின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ரயில்வே வருமானத்தை அதிகரிக்க சில யோசனைகளை மோடி தெரிவித்தார்.அது குறித்து அவர் பேசிய
Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி, ரயில்வேவருமானம், யோசனை

''சூரிய மின் சக்தி, ரயில் - சாலை இணைப்பு, புனித யாத்திரை பயணம் போன்றவற்றின் வழியாக, ரயில்வேயின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ரயில்வே வருமானத்தை அதிகரிக்க சில யோசனைகளை மோடி தெரிவித்தார்.

அது குறித்து அவர் பேசிய தாவது: புனித யாத்திரை மேற்கொள்ள பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில், யாத்திரை ரயில்களை இயக்க வேண்டும். உதாரணமாக, பீஹார் மாநிலம் பாட்னாவிலிருந்து, பஞ்சாபிலிருக்கும் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு யாத்திரை ரயில் இயக்க வேண்டும்.

மஹாபாரதம் மற்றும் கிருஷ்ணருடன் தொடர்புடைய இடங்களை இணைக்கும் வகையில் ரயில் இயக்கலாம். இது கிருஷ்ண பக்தர்களின் வரவேற்பை பெறும். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணியருக்கு, சிறப்பான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில், சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யலாம். சூரிய மின்சக்தியை விற்று வருவாய் ஈட்டலாம். ரயில் - சாலைகளை இணைப்பதன் மூலம், சரக்கு போக்குவரத்தை அதிகப்படுத்த முடியும். சரக்கு போக்குவரத்து மூலம் தான், ரயில்வேக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. இது இப்போது குறைந்து வருகிறது. ரயில்வேயில் வருவாய் ஈட்டும் திட்டங்களை செயல்படுத்த, அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-202012:13:38 IST Report Abuse
Mani . V ஏன் பாஸ், தனியாருக்கு விற்ற பிறகு அவர்கள்உயர்த்திக் கொள்ள மாட்டார்களா? மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து உயர்த்தி விட்டுத்தான் அவர்களுக்கு தாரை வார்க்க வேண்டுமா?
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-பிப்-202020:58:32 IST Report Abuse
Loganathan Kuttuva சரக்கு போக்குவரத்திற்கு மேலை நாடுகளில் உள்ளது போன்று தனி ரயில் பாதைகளை அணைக்க வேண்டும்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,இந்தியா
08-பிப்-202012:43:26 IST Report Abuse
sahayadhas Ticket விலை ஏற போகுது உஷார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X