சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தேவிகுளத்திற்கு மாற்ற போராட்டம்

Added : பிப் 08, 2020
Advertisement

மூணாறு :அடிமாடியில் இருந்து தேவிகுளத்திற்கு இணை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை மாற்றக்கோரி,கோரிக்கை வலுத்து வருகிறது.மூணாறில், சொக்கநாடு எஸ்டேட்டிற்குச் செல்லும் ரோட்டில் செயல்பட்டு வந்தஇணை வட்டார போக்குவரத்து அலுவலகம்,கடந்த 2018ல் மழையினால் ஏற்பட்ட பேரழிவை சுட்டிக்காட்டி அடிமாலிக்கு மாற்றினர்.அதனை, மூணாறு அருகேதேவிகுளத்தில் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு மாற்ற கடந்த மாதம் இடுக்கி கலெக்டர் தினேசன் உத்தரவிட்டார்.எதிர்ப்புஅதற்கு அடிமாலியில் உள்ள வாகன ஓட்டுனர்கள் மற்றும் வர்த்தகர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக போக்குவரத்து அலுவலகத்தை மாற்ற தேவையில்லை என தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தெரிவித்தார்.போராட்டம் மூணாறில்மோட்டார் வாகன தொழிலாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் ஆகியோர்வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தேவிகுளத்திற்கு மாற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்., 5ல்,அனைத்து தொழிற்சங்கம் சார்பில்ரோடு மறியல் நடந்தது.அதே கோரிக்கைக்காக நகரில் நேற்றுபகல் 2:00 மணி முதல் 3:00 மணி வரைஆட்டோ,ஜீப்,கார் இயக்காமல் நிறுத்தப்பட்டு ,ஊர்வலம் நடந்தது அதற்கு ஆதரவாக வர்த்தகர்கள் கடைகளை அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X