ஜல்லிக்கட்டில் கலப்பின மாடு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் கலப்பின மாடு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

Added : பிப் 08, 2020
Share

சென்னை : ஜல்லிக்கட்டு போட்டிகளில், கலப்பின மாடுகளை பங்கேற்க வைப்பதற்கு, தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் சேஷன் என்பவர், தாக்கல் செய்த மனு:பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தில், தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை பின்பற்றி, நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என, கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகள், அதிக அளவில் பங்கேற்க வைக்கப்பட்டன.நாட்டு மாடுகளை பாதுகாக்க, ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு எதிராக, கலப்பின மாடுகளை பங்கேற்க வைக்கின்றனர்.

இதற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார். அரசு தரப்பில், கூடுதல் பிளீடர் விஜயகுமார் ஆஜராகி, ''திருத்த சட்டத்தை பின்பற்றுகிறோம்,'' என்றார்.இதையடுத்து, இவ்வழக்கில், பின்னர் உத்தரவு பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X