கும்பகோணம் - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணி ஜரூர்| Dinamalar

தமிழ்நாடு

கும்பகோணம் - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணி 'ஜரூர்'

Added : பிப் 08, 2020
Share
 கும்பகோணம் - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணி 'ஜரூர்'

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் - தஞ்சாவூர் (வி.கே.டி.,) நான்கு வழிச்சாலை பணியில் பழைய சாலையை சீரமைத்து புதுப்பித்து தார் சாலை அமைக்கும் பணி துவங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலை இருவழிச்சாலையாக இருந்ததை, நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு 711 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.விக்கிரவாண்டியிலிருந்து சேத்தியாதோப்பு பின்னலுார் வரை 66 கி.மீ., துாரத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மும்பையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்பிராஸ்ரெக்சர் நிறுவனம் காண்ட்ராக்ட் எடுத்து, இரண்டாண்டுகளில் நான்கு வழிச் சாலை பணியை செய்து முடிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் ஆறுகள், சிறு நதிகள், பாசன வாய்கால்கள் செல்ல 90 குறும்பாலங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள், வாகனங்கள் பைபாஸ் சாலையை பாதுகாப்பாக கடக்க 25 தரைப்பாலங்கள், தென்பெண்ணையாறு, கெடிலம் ஆற்றின் குறுக்கே 2 மேம்பாலங்களும், கோலியனுார் கூட்ரோடு, பண்ருட்டி பைபாஸ், வடலுார் பைபாஸ் ஆகிய இடங்களில் 3 ரயில்வே மேம்பாலம, வடலுார் மருவாய் கிராமம் அருகே பைபாசில் மேம்பாலம் ஒன்றும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 66 கி.மீ., துாரத்தில் விக்கிரவாண்டி 0 கி.மீ., துாரத்திலிருந்து முதல் 10 கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலையின் கிழக்கு பகுதியில் புதிய இருவழிச்சாலை அமைத்து தார்சாலை போடும் பணி முடிவடைந்தது.புதியதாக அமைக்கப்பட்ட சாலையில் வாகன போக்குவரத்தை திருப்பி விட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் இப்பகுதியில் உள்ள பழைய கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையினை புதுப்பிக்க சாலையின் மேற்கு புறங்களில் பார் மண் கொட்டி அகலப்படுத்தினர்.

பின்னர், பழைய தார்சாலையை மண்பகுதி வரை ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி சாலையை சமன் செய்து பின்னர் பழைய சாலைக்கும், புதிய சாலைக்கும் இடையே சென்டர் மீடியன் அமைக்க மண் கொட்டி சரி செய்தனர்.அதே நேரத்தில் பழைய சாலையை பார் மண் கொட்டி மேடாக்கி சாலையை இறுகப்படுத்தும் பணி முடிந்து தற்போது முதலில் 0 கி.மீ., துாரத்திலிருந்து முதல் 10 கி.மீ., துாரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது. இந்தாண்டு இறுதிக்குள் பணியை முடித்து சாலையில் வாகனங்கள் பயணிக்க திட்டமிட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X