பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பாதிப்பு? 17 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

Added : பிப் 08, 2020
Advertisement

சென்னை : ''சீனாவில் இருந்து தமிழகம் வந்த 36 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது'' என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறினார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பொது சுகாதாரத்துறை இயக்குனர்குழந்தைசாமி ஆகியோர்நேற்று சந்தித்து பேசினர். அவர்களுக்குஅளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர்.பின் செயலர் பீலா ராஜேஷ் அளித்த பேட்டி:சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 17 ஆயிரம் பேர் 'தெர்மல் ஸ்கேனர்' வாயிலாக பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,603 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதுவரை 36 பேரிடம்கொரோனா வைரஸ் பரிசோதனை நடந்தது.இதில் 32 பேரின் முடிவுகள் கிடைத்துள்ளன; யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை. நான்கு பேரின் பரிசோதனை முடிவுகள் ஓரிரு நாட்களில் கிடைக்கும்.தற்போது அரசு மருத்துவமனைகளில் 11 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தமிழகத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளன. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X