பொது செய்தி

தமிழ்நாடு

முடிதிருத்துவோர் நலச் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்

Added : பிப் 08, 2020
Advertisement
 முடிதிருத்துவோர் நலச் சங்க  மாவட்ட செயற்குழுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி:முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.

கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு முடிதிருத்தும் தொழிலாளர் நல மாநில கொள்கை பரப்பு செயலர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சங்கர், பொருளாளர் காமராஜ், இளைஞரணி செயலர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் பிரச்னை காரணமாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவருக்கு வீட்டு மனை பட்டா வழங்குதல்.வீட்டு பொருட்களை சேதப்படுத்தியவர்கள் அதற்கான நஷ்ட ஈட்டினை வழங்குவதுடன், தகுந்த பாதுகாப்பு வழங்குதல். தமிழகத்தில் அனைத்து கிராமங்களில் வசிக்கும் முடிதிருத்தும் தொழிலாளிகளில் 3 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இளவரசன், ஆத்துார் நகர செயலர் மணிகண்டன் மணியன், சுப்ரமணியன், கணேசன், குணசேகரன், பெரியதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X