ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், பழம்| Dinamalar

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், பழம்

Added : பிப் 08, 2020
Share
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில், பழம், பிஸ்கட் வழங்கப்பட்டது.ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள், பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்கு ஒட்டன்சத்திரம் வழியாக செல்வர். இவர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில்

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில், பழம், பிஸ்கட் வழங்கப்பட்டது.ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள், பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்கு ஒட்டன்சத்திரம் வழியாக செல்வர். இவர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு பால், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.நகராட்சி கமிஷனர் தேவிகா தலைமை வகித்து பக்தர்களுக்கு வழங்கினார். நகராட்சி பொறியாளர் முகமது சாகுல் ஹமீது, துப்புரவு ஆய்வாளர் வீரபாகு, இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X