கோவை வீரர்கள் 'எதிர் நீச்சல்!' நீச்சல் போட்டியில் ஏழு தங்கம் வென்று அசத்தல்

Added : பிப் 08, 2020
Advertisement

கோவை:நாமக்கலில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில், கோவை மாநகராட்சி நீச்சல் அணி (சி.சி. எஸ்.டி.,) அணி, 7 தங்கம், 22 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.நாமக்கல், பாவை குழுமம் சார்பில், 2ம் ஆண்டு மாநில அளவிலான நீச்சல் 'சாம்பியன்ஷிப்' போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, சென்னை, திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.6, 8, 10, 12,14,17 வயது பிரிவினருக்கான, 50மீ., ப்ரீஸ்டைல், 100மீ., ப்ரீஸ்டைல், 100மீ., தனிநபர் மெட்லி ரிலே, 50 மீ., பேக் ஸ்ட்ரோக், 50மீ., பட்டர்பிளை போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.கோவை மாநகராட்சி நீச்சல் அணியிலிருந்து, 24 வீரர்கள் பங்கேற்றனர்.இளம் நீச்சல் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தி, 7 தங்கம், 22 வெள்ளி, 9 வெண்கல பதக்கம் வென்று அசத்தினர்.ஜனார்தன், மோனிஷ் ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், கோவை மாநகராட்சி நீச்சல் அணி வீரர்கள், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X