பொது செய்தி

தமிழ்நாடு

மருதமலையில் இன்று தைப்பூச தேர்த்திருவிழா

Added : பிப் 08, 2020
Share
Advertisement

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா இன்று நடக்கிறது.மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன், தைப்பூச திருவிழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தைப்பூச தேர்த்திருவிழா இன்று நடக்கிறது.இன்று அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை, 5:00 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை, 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.காலை, 10:40 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதமாக, வெள்ளை யானையில், திருவீதி உலா வந்து, மேஷ வாகனத்தில் திருத்தேரில் எழுந்தருளுதலும், அதன்பின் காலை, 11:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடைபெறுகிறது.பகல், 1:00 மணிக்கு, உச்சிகால பூஜை நடக்கிறது. தைப்பூச திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X