தமிழ்நாடு

மணலை கொள்ளையடித்ததாக 'கழுதைகள்' கைது!.கலெக்டர் தலையிட கோரிக்கை!

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பேரூர்:தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் நடந்து வரும் மணல், மண்கொள்ளையை தடுக்க விவசாயிகள் பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு அதிகாரிகளும், சில அதிகாரிகளும் கைகோர்த்துக் கொண்டு, கடத்தலுக்கு துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு, இயற்கை பாழ்படுவதை தடுக்க வேண்டும்.தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் மணல், கிராவல் மண், செம்மண்
  மணலை கொள்ளையடித்ததாக 'கழுதைகள்' கைது!.கலெக்டர் தலையிட கோரிக்கை!

பேரூர்:தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் நடந்து வரும் மணல், மண்கொள்ளையை தடுக்க விவசாயிகள் பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு அதிகாரிகளும், சில அதிகாரிகளும் கைகோர்த்துக் கொண்டு, கடத்தலுக்கு துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு, இயற்கை பாழ்படுவதை தடுக்க வேண்டும்.தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் மணல், கிராவல் மண், செம்மண் கடத்தல், அரசியல்வாதிகள் மற்றும் சில வருவாய்த்துறை, போலீசார் ஆதரவுடன், ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.குறிப்பாக, நான்கு மாவட்டங்களின் உயிர்நாடியான நொய்யல் ஆறு, மணல் கொள்ளை கும்பலால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது.
இதனால், கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் போது, தடம்மாறிய நொய்யல் ஆறு, பல விவசாய நிலங்களை சீரழித்து சென்றது. அத்துயரம், இன்று வரை தொடர்கிறது.தற்போது, பெருகியுள்ள மணல் வளத்தை கொள்ளையடித்து, உயர்ந்துள்ள நிலத்தடி நீர்மட்டத்துக்கு வேட்டு வைக்கும் செயலை, 'மணல் மாபியாக்கள்' துவக்கியுள்ளனர். இதில், அரசியல்வாதிகளின் பங்கே அதிகம்.இவர்கள், வனப்பகுதி அருகே உள்ள வடிவேலம்பாளையம், மோளப்பாளையம் கிராம நீரோடைகளை சிதைத்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை, 2:50 மணிக்கு,நரசீபுரம் சின்னாற்றில்கழுதைகளில் மணல் கடத்தப்பட்டது. விவசாய நிலங்களுக்கு காவலுக்கு சென்று திரும்பிய விவசாயிகள், மணல் கடத்தலில் ஈடுபட்டோரைபிடித்து, ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஆறு கழுதைகளுடன்,இரண்டு பேரை கைது செய்தனர்.வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.நரசீபுரத்தில்பதுக்கப்பட்டிருந்த மணலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
கடத்தலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க, அரசியல் தலையீடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை காப்பாற்ற, விவசாயிகள் பகீரத முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், கடத்தலுக்கு அரசு அதிகாரிகள் துணை போவதாகஎழுந்துள்ள புகார்,விவசாயிகளை விரக்தியடைய செய்துள்ளது.இப்படியே போனால், தொண்டாமுத்துார் ஒன்றியத்தின் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் அதலபாதாளத்துக்கு செல்வது உறுதி.
இயற்கையை காப்பாற்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினர் எதிர்பார்ப்பு.கலெக்டரே... செய்வீர்களா...?குண்டர் சட்டத்தில் கைது எப்போது...?வறட்சி காலங்களின் போது, நொய்யல் உள்ளிட்ட நீரோடைகளில் மணல் கடத்தல் தீவிரமாக நடந்தது. இது குறித்து, நமது நாளிதழில் படங்களுடன் தொடர் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, நொய்யல் வழித்தடப்பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை வைத்து, தண்டோரா போடப்பட்டது.
மணல் கடத்தலில் ஈடுபடுவோர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் எனவும், அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை மணல், மண் கடந்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவர் கூட குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-பிப்-202015:23:01 IST Report Abuse
அருணா கழுதைகளுக்குபேச்சுப் பயிற்சி கொடுத்தால் கடத்தலை தவிர்க்க முடியுமா? அதிகாரிகள்தான் பதில் சொல்லணும்.
Rate this:
Cancel
08-பிப்-202011:20:25 IST Report Abuse
தமிழ் அப்பாடா மிகப்பெரிய்ய்ய்ய்ய்ய கேஸ். இந்த கேஸ் ஐ பிடித்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் போஸ்ட் கொடுக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X