பொது செய்தி

தமிழ்நாடு

வெளியே சொல்ல முடியாத உறவு

Added : பிப் 08, 2020
Share
Advertisement
 வெளியே சொல்ல முடியாத உறவு

மாறி வரும் இன்றைய வாழ்க்கை முறையில், உடல் சார்ந்த நோய்களுக்கு இணையாக, மனம் சார்ந்த நோய் களும் அதிகரித்து வருகின்றன. பல உடல் நல பாதிப்புகளின் பின்னணி மனம்தான் என்பது, பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தெரிவதில்லை. அறிந்து மீண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அப்படி மீண்டு வந்தவர்கள் குறித்த தொடர்தான் இது. பூர்ணிக்கு, திருமணமாகி இரு குழந்தைகள் உண்டு. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதையடுத்து, குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டது.கணவர் செய்த துரோகத்தை, அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதில் இருந்து விடுபட, நடைப்பயிற்சிசென்றார். அப்போதுதான் நிகிலை சந்தித்தார்.இவரை விட இளையவர் அவர். ஆரம்பத்தில் நட்பாக துவங்கிய உறவு, காலப்போக்கில் தீவிர காதலாக மாறியது. பூர்ணி மனதில் இருந்த வெற்றிடத்தை, அவர் தனது அன்பால் நிறைத்தார்.இருவரும் கணவன், மனைவியாகவே வாழத் துவங்கினர். ஆனால், சில வருடங்கள்தான் அந்த உறவு நீடித்தது.திடீரென ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்நிகில்.இவர்களின் உறவு மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டதால்,பூர்ணியால் தனதுவலி, துக்கத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. வாய்விட்டு அழக்கூட முடியவில்லை. மனவேதனையை அடக்க முடியவில்லை.உறங்க முடியவில்லை.துவங்கிய உடல்நல கோளாறு!நாட்கள் இப்படி சோகமாக நகர,பூர்ணிக்கு திடீர், திடீரென மயக்கம் வந்தது.அவ்வப்போது மூச்சு திணறல், நெஞ்சடைத்தல், பேச முடியாமல் திணறுதல் உள்ளிட்ட பிரச்னைகளும், வரிசைக்கட்டி நின்றன. நல்லவேளை, மருத்துவ பரிசோதனைகளில், ஆரோக்கியமாக இருப்பது உறுதியானது.நண்பர் ஒருவரின் ஆலோசனையின்படி, மருதமலை அடிவாரத்தில் உள்ள, நாச்சியார் மனநல மையத்தின் மனநல டாக்டர் வெங்கடேஸ்வரனை சந்தித்தார்.''முதல் கலந்துரையாடலில் மிகவும் இறுக்கமாக இருந்த பூர்ணி, எதையும் வெளிப்படையாக பேசவில்லை. அவரின் உடலின் மொழி, அவர் மனச்சோர்வில் இருப்பதை உணர்த்தியது.பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென வெடித்து அழுதார். சில நிமிட அமைதிக்குப் பின், தனது உள்வலியை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்டார்,'' என்று துவங்கினார் டாக்டர் வெங்கடேஸ்வரன்.பூர்ணிக்கு என்ன பிரச்னை?டாக்டர் வெங்கடேஸ்வரன்கூறியதாவது:பூர்ணி, Dissociative Syndrome எனும் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது ஒருவகையான உள்மனச்சிக்கல். இப்பேர்ப்பட்டவர்கள், தங்கள் மனச்சிக்கலை நேரடியாக பகிராமல், வேறுவிதமான அறிகுறிகளுடன் வெளிப்படுத்துவார்கள்.அடைத்து வைத்திருந்த துக்கத்தை, என்னிடம் இறக்கி வைத்த பின் ஆசுவாசமடைந்தார். ஆண் நண்பருடனான தவறான உறவு, அந்த உறவின் அர்த்தம், இழப்பின் பாதிப்பு, வெறுமையை கையாளும் விதம் குறித்து, பல்வேறு கட்ட கலந்துரையாடலில், ஆலோசனைகள் வழங்கினேன். புதிய உறவு தவறு என்பதை புரியவைத்தேன்.நாளடைவில் மயக்கம் ஏற்படுதல், நெஞ்சடைத்தல் போன்ற அறிகுறிகள்,மெல்ல குறையத் துவங்கின. மருந்துகளின் உதவியுடன் ஆறு மாத காலத்தில், அவர் தெளிந்த மனநிலைக்கு வந்தார்.இன்னொரு நல்ல விஷயம், அவரது கணவருக்கிருந்த மற்றொரு தொடர்பும் ரத்தானது. தனது தவறுகளுடன், கணவரின் தவறுகளையும் மன்னித்தார். கணவருடனான உறவை, முன்பை விட பல மடங்கு பலப்படுத்தினார். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட, செலவிட, மகிழ்ச்சியான வாழ்க்கை அவரை வாரியணைத்துக் கொண்டது.டாக்டர் வெங்கடேஸ்வரன்

97156 85000, 90422 97555.டியோசியேட்டிவ் சிண்ட்ரோம்!''வெளிப்படையாக பேச வைக்கும் போதுதான்,இவர்களின்மனச்சிக்கல் குறையும்.இவர்களின்மனவலியை குறைப்பதற்கே,முக்கியத்துவம்அளிக்க வேண்டும். மாறாக, இதனால் ஏற்படும் மயக்கம், மூச்சடைப்பு போன்ற அறிகுறிகளில் கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தால், மனநோய் தீவிரமாகும்,'' என்கிறார் டாக்டர் வெங்கடேஸ்வரன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X