பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு சொட்டாக வரும் குடிநீர்

Added : பிப் 08, 2020
Advertisement
 சொட்டு சொட்டாக வரும் குடிநீர்

திருப்பூர்:நல்லுார் பகுதியில் குழாய்களில் மிகக்குறைந்த அளவு மட்டுமே குடிநீர் வருவதால், குறைந்த பட்ச அளவு குடிநீர் கூடக் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, நல்லுார் பகுதியில், 40 வது வார்டுக்கு உட்பட்ட கே.என்.பி., சுப்ரமணிய நகர் பகுதியில், நுாற்றுக்கணக்கான வீடுகளில் வீட்டு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்கு முன் பாரதி நகர் பகுதியிலிருந்து மேல்நிலைத் தொட்டி மூலம் இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.தற்போது இது பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.வாரம் ஒரு முறை மட்டும் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது, இதில் மிகவும் குறைந்த அளவு மட்டுமே குடிநீர் வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.அப்பகுதியினர் கூறுகையில், 'கடந்த சில மாதங்களுக்கு முன், இப்பகுதியில், குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின, குடிநீர் ஒழுங்காக வருவதில்லை. இது குறித்து குடிநீர் ஆபரேட்டருக்கு தகவல் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. ஒன்றரை மணி நேரத்தில், 8 முதல் 10 குடம் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது,' என்றனர்.இது குறித்து மாநகராட்சி அலுவலரிடம் கேட்டதற்கு, 'கேட் வால்வு பகுதியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X